விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

2 மணி நேரத்தில் 30 ஆயிரம் வாக்குகள்... விறுவிறுப்பான விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துவருகிறது. மும்முனைப் போட்டியாக திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் களத்தில் உள்ளன.
Published on

இன்று விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் 276 வாக்குச் சாவடிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்க, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்துவருகிறார்கள். காலை 9 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 2,37,002 வாக்காளர்களில் இரண்டு மணி நேரத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டார்கள்.

மாலை 6 மணிக்கு வாக்கு பதிவு முடிவடையும் நிலையில் 29 வேட்பாளர்கள் இன்றூ களத்தில் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள், திமுகவின் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபிநயா பொன்னிவளவன்.

வாக்குப்பதிவுக்குப் பிறகு விழுப்புரம் அருகே பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட உள்ளது.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் ஜூலை 13-ம் தேதி நடைபெறும்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com