டெலிகிராம் சிஇஓ காதலி ஜூலி வவிலோவா
டெலிகிராம் சிஇஓ காதலி ஜூலி வவிலோவா

காதலியுடன் டேட்டிங்கும், காதலியின் லைவ் அப்டேட்டிங்கும்… டெலிகிராம் சிஇஓ பாவெல் கைதும், பின்னணியும்!

டெலிகிராம் சிஇஓ பாவெல்லை அவரது காதலியின் சோஷியல் மீடியா அப்டேட்ஸை வைத்தே நீண்ட காலம் கண்காணித்து பிரான்ஸில் வைத்து கைது செய்திருக்கிறது. இந்த வகையான கண்காணிப்புக்கும், பின்தொடர்வுக்கும் OSIT (Open-Source Intelligence) எனப்பெயர்.
Published on

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள ஊடகமான டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்ஸ் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலி குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக் காணொளிகள், சட்டத்துக்குப்புறம்பான செயல்பாடுகள் டெலிகிராமில் தொடர அனுமதித்தோடு அதுதொடர்பான விசாரணைகளில் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை எனப் பல்வேறு காரணங்களைக் காட்டி பாவெல் துரோவை கைது செய்திருக்கிறது பிரான்ஸ் போலீஸ். 

தற்போது 38 வயதாகும் பாவெல் துரோவ் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர். துபாயில் டெலிகிராம் செயலியின் தலைமை அலுவலகத்தை தொடங்கி அங்கிருந்தபடியே பணியாற்றிவரும் துரோவை, அவரின் காதலி ஜூலி வவிலோவா(Juli Vavilova)வின் சோஷியல் மீடியா ஸ்டேட்டஸ்களை வைத்தே போலீஸ் பின் தொடர்ந்து கைது செய்திருக்கிறது. 

பாவெல் துரோவ்
பாவெல் துரோவ்

24 வயதாகும் ஜுலி வவிலோவா துபாயில் வசித்துவந்தவர். டெலிகிராம் சிஇஓ பாவெல்லுடன் நெருங்கி பழகிவந்த ஜூலியைப் பற்றிய தகவல்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன. பாவெல்லுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டிருக்கும் ஜூலி தொடர்ந்து பாவெல்லுடன் இருக்கும் இடத்தின் ஜியோ லொக்கேஷனையும், படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதவி செய்துவந்திருக்கிறார். பாவெல்லுடன் வெவ்வேறு நாடுகளுக்கு கூடவே தனி விமானத்தில் பயணம் செய்த ஜூலி எல்லா இடங்களில் இருந்தும் ஜியோ லொக்கேஷனோடு போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்திருக்கிறார்.

கிரிப்டோ கரன்சி பயிற்சியாளர் எனச்சொல்லப்படும் ஜூலியை இன்ஸ்டாகிராமில் 20,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள். இவர் ஆங்கிலம், ரஷ்யம், ஸ்பானிஷ், மற்றும் அரபு மொழிகள் பேசக்கூடியவர் எனச்சொல்லப்படுகிறது. ஜூலியை OSINT எனச்சொல்லப்படும் Open-Source Intelligence முறையின் வழியே போலீஸ் கண்காணித்தாகச் சொல்லப்படுகிறது.

OSINT என்பது பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களை சேகரித்து, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது. இந்த தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் மூலம் கிடைக்கக்கூடியவை.

பாவெல் துரோவ் காதலி ஜூலி வவிலோவா
பாவெல் துரோவ் காதலி ஜூலி வவிலோவா

துரோவ் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் வாவிலோவா ஏற்கெனவே தொடர்புடையவராக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், சர்வதேச ஊடக விமர்சகர்களோ ஜூலி கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், தெரியாமல் இந்த பிரச்சனையில் அவர் மாட்டிக்கொண்டதாகவும் சொல்கின்றனர். வேறு சிலரோ அவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட் ஏஜென்ட்’ என்கிறார்கள். 

துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு வாவிலோவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவரது குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர். போலீஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் சொல்லப்பட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com