Maria Branyas Morera
இளம் வயதில் மரியா பிரான்யாஸ் Twitter

மனநிறைவுடன் மரணித்த உலகின் மிகவும் வயதான பெண்.. அவரின் ஆயுசை அதிகரித்த பழக்கவழக்கம் என்ன?!

முதல் உலகப் போரின் போது, ப்ரனியாஸ் தனது குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு ஒரு படகில் தப்பிச் சென்றார்.
Published on

உலகின் மிகவும் வயதான நபராக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் ஸ்பெயினில் ஆகஸ்ட் 19-ம் தேதி காலமானார். கின்னஸ் புத்தகத்தின் கூற்று படி, மரியா பிரான்யாஸ் உலகின் எட்டாவது வயதான நபர். தன்னம்பிக்கை மற்றும் தெளிவான எதிர்மறையை வழிநடத்தும் பெண், இந்த குணாதிசயங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ அவருக்கு உதவியது என்று நம்பினார்.  

ப்ரன்யாஸ் தனது வாழ்க்கையின் கடைசி இருபது வருடங்களை வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள கட்டலோனியாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கழித்தார், அங்கு அவர் கடந்த திங்கட்கிழமை தூக்கத்திலேயே இறந்தார். "மரியா பிரான்யாஸ் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே அமைதியான முறையில் இறந்துவிட்டார். அவர் தூக்கத்தில், நிம்மதியாக, வலியின்றி தன் ஆயுசை முடித்து கொண்டார்" என்று அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவாகி இருந்தது. மேலும் அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியை உறுதிப்படுத்தினார்.

மரியா பிரான்யாஸ்
மரியா பிரான்யாஸ்

மூன்று பிள்ளைகளின் தாயான பிரான்யான்ஸின் எக்ஸ் பக்கத்தை (ட்விட்டர்) அவரது மகள் கையாள்கிறார். திங்கட்கிழமை அவர் இறப்பதற்கு முன்பு அவரின்   X பக்கத்தில், தனது மரணம் நெருங்கிவிட்டதாகக் கூறியிருந்தார்: "நான் பலவீனமாக உணர்கிறேன். எனக்கான நேரம் வந்துவிட்டது. அழாதே, எனக்கு அழுவது பிடிக்காது. நான் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிவாகி இருந்தது. 

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்த மரியா பிரான்யாஸுக்கு இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் போன்ற வரலாற்று நிகழ்வுகளை அனுபவித்தவர். 

Spanish pensioner Maria Branyas Morera
Spanish pensioner Maria Branyas Morera

2020-ம் ஆண்டில், 113 வயதாக இருந்த பிரான்யாஸ், முதியோர் இல்லத்தில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடல்நிலை மோசமான போதும் தன் மன வலிமையை கொண்டு கொரோனா வைரஸை வென்றார். அவருடன் வசித்த பலர் கோவிட் சமயத்தில் இறந்தனர். 

முதல் உலகப் போரின் போது, ப்ரனியாஸ் தனது குடும்பத்துடன் ஸ்பெயினுக்கு ஒரு படகில் தப்பிச் சென்றார்.  1918-19 மற்றும் 1936-39 ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் உலகம் முழுவதும் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்று நோய்களை எதிர்த்து போராடி வென்றார். 

மரியா பிரான்யாஸ்
மரியா பிரான்யாஸ்

அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ், தன் வாழ்க்கையில் அதீத ஒழுங்கை பின்பற்றி வந்தார். "ஒழுங்கு, அமைதி, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் எப்போதுமே தொடர்பில் இருத்தல், இயற்கையுடன் ஒன்றி இருத்தல், மன சமநிலை, கவலை இல்லாமல் இருப்பது, நேர்மறை எண்ணங்கள் மற்றும் பிறருக்கு தீங்கு விளைவுக்கும் குணமுள்ளவர்களிடம் (டாக்ஸிக் நபர்கள்) இருந்து விலகி இருத்தல்" ஆகியவை அவருக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுத்ததாக அவர் கின்னஸுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். 

"என் மன, உடல் ஆரோக்கியம் காரணம் என்றாலும், நீண்ட ஆயுசுடன் இருப்பதற்கு அதிர்ஷ்டமும் காரணம் என்று நான் நினைக்கிறேன். என் ஆரோக்கியமான மரபணுவும் காரணம்” என்றார். 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com