thol-thirumavalavan-condemns-authorities-kallakurichi-hooch-tragedy
திருமாவளவன்

''கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு பின் கள்ளச்சாராய மாஃபியாவின் சதி உள்ளது''- திருமாவளவன் குற்றச்சாட்டு!

''வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு ஒப்பாரி ஓலம் மனதை கிழிக்கிறது. போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் அவர்கள் துணை இல்லாமல் மெத்தனால் கள்ளச்சந்தை வியாபாரம் நடந்திருக்க முடியாது''
Published on

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தப்பின் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன்.

''இந்த கொடூர சம்பவம் பெரும் வேதனையையும் மனஉளைச்சலையும் அளிக்கிறது. வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு ஒப்பாரி ஓலம் மனதை கிழிக்கிறது. போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாமல் அவர்கள் துணை இல்லாமல் மெத்தனால் கள்ளச்சந்தை வியாபாரம் நடந்திருக்க முடியாது'' என்று சொல்லியிருக்கிறார் திருமாவளன்.

thol-thirumavalavan-condemns-authorities-kallakurichi-hooch-tragedy
திருமாவளவன்

''இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த நடவடிக்கை போதாது. இன்னும் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு இந்த கள்ளச்சாராய கும்பலை தமிழக முழுவதும் ஒழித்துக்கட்ட வேண்டும். இந்த கள்ளச்சாராய வியாபாரத்திற்கு பொறுப்பானவர் யார் என்று கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கவேண்டும்'' என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் திருமாவளன்.

இதற்கிடையே இன்று மாலை(ஜூன் 24, 2024) முழு மதுவிலக்கை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டம் அருகே விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com