டொனால்ட் டிரம்ப்பை மீண்டும் கொல்ல முயற்சி... கோல்ஃப் மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 1.30 மணியளவில் ஃப்ளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் நண்பர்களோடு கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது டிரம்ப் விளையாடியபடி ஒவ்வொரு குழியைத்தாண்டிப்போகும்போதும், அவருக்கு முன்பாகச் சென்ற சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்திருக்கின்றனர்.
அப்போது 3-வது மற்றும் 5-வது குழிக்கிடையே சீக்ரெட்ஸ் சர்வீஸ் ஏஜென்ட் நின்றுகொண்டிருக்க, மரங்களால் ஆன மைதானத்தின் தடுப்புப் பகுதியை ஒட்டிய செடிகளுக்கு இடையே ஒரு துப்பாக்கி குறிபார்ப்பதைப் பார்த்து, உடனடியாக அந்த இடத்தை நோக்கி ஏஜென்ட் சுட, இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. உடனடியாக மற்ற சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்டுகள் டிரம்ப்பை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். இச்சம்பவத்தில் சீக்ரெஸ் சர்வீஸ் முன்கூட்டியே செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. சீக்ரெட் சர்வீஸ் சுட்டதால் கொலை முயற்சி செய்த நபர் ஏகே 47 ஸ்டைல் துப்பாக்கி, இரண்டு பைகள் மற்றும் ஒரு கேமராவைவிட்டு விட்டு அங்கியிருந்து தப்பியிருக்கிறார்.
சந்தேகப்படும் நபர் தப்பிச்சென்ற நிஸான் காரை போலீஸார் 50 கிலோமீட்டர் தொலைவில் மடக்கிப்பிடித்தனர். அவரது பெயர் ரியான் வெஸ்லி ரூத் எனத் தெரியவந்திருக்கிறது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும் டிரம்ப் உற்சாத்துடனே இருந்தார். நண்பர்களிடம் தன்னால் முழுமையாக விளையாடமுடியாமல் போனதைச் சொல்லி சிரித்திருக்கிறார். "நான் பாதுகாப்பாகவும் நலமுடனும் இருக்கிறேன். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. ஆனால், இந்த உலகில் நம்முடைய வெற்றியைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள்" என்று பதிவை வெளியிட்டிருக்கிறா டிரம்ப்