செய்திகள்
‘’2026 சட்டமன்றதேர்தலில் மட்டுமே போட்டி… இடையே எந்த தேர்தல் வந்தாலும் போட்டியில்லை’’ - விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை - தமிழக வெற்றிக்கழகம்
நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரான என்.ஆனந்த் எனும் 'புஸ்ஸி' ஆனந்த் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்த அறிக்கையில் தமிழக வெற்றிக்கழகத்தின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று மக்கள் பணியாற்றுதுதான் இலக்கு. அதனால், இடைப்பட்ட இந்தக்காலகட்டத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தல், குறிப்பாக ஜூலை 10-ம் தேதி நடைபெற இருக்கும் விக்கிரவாண்டித் தேர்தல் வரை எந்தத் தேர்தலிலும் தவெக கலந்துகொள்ளாது என அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
அதேப்போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என விஜய் அறிவுறுத்தியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.