தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பாராட்டுவிழா நடைபெறுகிறது. இதற்காக காலை 6 மணிக்கே விழா நடைபெறும் திருவான்மியூர் ஶ்ரீ ராமகிருஷ்ணா கன்வென்ஷன் சென்டருக்கு வந்துவிட்டார் விஜய்! கிழக்கு கடற்கரைச்சாலை முழுக்க விஜய்யை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
தொகுதி வாரியாக பரிசு!
இன்று நடைபெறும் பாராட்டு விழா முதற்கட்ட விழா மட்டுமே. தமிழகத்தில் உள்ளா 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிவாரியாக 10 மற்றும் 12 வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்குகிறார் விஜய்!
துபாய் செக்யூரிட்டி ஏஜென்ஸி!
ரசிகர்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதால் சல்மான் கான், ஷாருக்கான் நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் துபாய் ஏஜென்சியிடம் பாதுகாப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது!
மாணவர்கள் வருகை!
முதல் கட்டமாக நடைபெறும் பாராட்டு விழாவுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் வருகை. இன்னும் சற்று நேரத்தில் விழா தொடங்கயிருக்கிறது!
விழா அரங்கில் நடிகர் விஜய்!
விஜய்
விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கும் நிலையில் விஜய் மேடையேறி பேச இருக்கிறார்.
மேடையில் விஜய் வருகைக்காக காத்திருப்பு!
விழா மேடைக்கு விஜய் வருகைக்காக காத்திருக்கும் மாணவர்கள்!
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பத்திரிகையாளர்!
முன்னாள் பத்திரிகையாளரான கற்பகம் என்பவர் விஜய்யின் இன்றைய விழாவைத் தொகுத்து வழங்க இருக்கிறார். இவர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கு தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
செல்போனுக்குத் தடை!
விஜய் விழாவில் மாணவர்கள், பெற்றோர் என யாரும் செல்போன் உள்ளே கொண்டு செல்லக்கூடாது எனவும், நோட்டு, பேனா புத்தகங்களுக்கும் தடைவிதித்து அதை வெளியேயே வாங்கிவைத்திருக்கிறார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடக்கம்!
''தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா'' எனப்பெயரிடப்பட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது!
மாணவர்களுடன் விஜய் க்ளிக்ஸ்
விஜய்
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மாணவர்களுடன் மாணவராக உட்கார்ந்து போட்டோ எடுத்துவரும் நடிகர் விஜய்!
நாங்குநேரி சின்னத்துரையுடன் விஜய்!
விஜய்
சாதிய வன்முறையால் பள்ளி மாணவர்களால் கொடுமையாகத் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரையுடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்
Say No To Drugs - சபதம் எடுக்கச்சொன்ன விஜய்!
Say No To Temporary pleasures… Say No To Drugs என தன்னுடைய உரையின் இறுதியில் சபதம் எடுக்கச்சொன்னார் விஜய்.
வைரமோதிரம் பரிசாக அளிக்கும் விஜய்!
மாணவர்களுக்கு சால்வை, சான்றிதழ் வழங்கி வைரமோதிரம் பரிசாக அளிக்கிறார் விஜய். காலில் விழுந்து வணங்கும் மாணவர்கள்.
விழாவின் ஸ்பெஷல் படங்கள்!
விஜய்
விஜய்
விஜய்
விஜய்
நீளும் புகைப்பட வரிசை!
ஒவ்வொரு மாணவரும் தங்கள் குடும்பத்தினரோடு வந்து படங்கள் எடுக்க, அவர்கள் கேட்கும் போஸ் எல்லாம் கொடுத்து மகிழ்வித்துவருகிறார் விஜய்.