ராகுல் காந்தி
ராகுல் காந்தி

EXIT POLL : ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்... தோல்வி பயத்தில் பாஜக!

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்றுடன் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஹரியானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது!
Published on

இந்தியாவின் வட மாநிலங்களில் மிக முக்கிய மாநிலங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்றுடன் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8-ம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

கருத்துகணிப்புகளின் படி 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் காங்கிரஸ் பாதிக்கும் மேல் அதாவது 54 தொகுதிகளில் வெல்லும் என்றும், பாஜக 28 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 8 தொகுகளைக் கைப்பற்றும் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்திவிட்டு ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க இருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஹரியானாவைப் போலவே 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஃபரூக் அப்துல்லா தலைமையிலா தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், பாஜக 30 தொகுதிகள் வரையிலும், மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 10 தொகுதிகள் வரையிலும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸின் துணையோடு மீண்டும் சட்டமன்றத்தைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com