ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் வரலாற்று வெற்றியை நோக்கி காங்கிரஸ்… சோகத்தில் மோடி!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இது என்பதால் நாடே இந்த முடிவுகளுக்காக காத்திருந்தது. எதிர்பார்த்ததுபோல பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய தோல்வியைத் தரும் செய்தியாக முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
Published on

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய 1 மணி நேரம் முடிவடைந்துவிட்ட நிலையில் யார் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்கிற டிரெண்ட் தெரிந்துவிட்டது. 

ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் 56 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன்படி ஆட்சி அமைக்கத்தேவையான 46 தொகுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கூட்டணி பெற்றிருப்பதால் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க இருக்கின்றன.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களைப் பிடிப்போம் என பிரசாரம் செய்த பாஜக கடைசியில் 240 இடங்களிலேயே வென்று பெரும்பான்மையை இழந்து கூட்டணி ஆட்சி நடத்துகிறது. இதற்கிடையே தற்போது மாநில தேர்தல்களிலும் பாஜக ஆட்சியை இழந்துவருவது ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறது. அடுத்து மகாராஷ்ராவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக அங்கேயும் தோற்றால் மோடியின் செல்வாக்கு மொத்தமாக சரியும்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com