நயப் சைனி - மோடி
நயப் சைனி - மோடி

ஹரியானாவில் தலைகீழாக மாறிய முன்னணி நிலவரம்... மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக?!

ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றிபெறும் என காலையில் முன்னணி வாக்குகளின் டிரெண்ட் உருவான நிலையில் தற்போது அப்படியே மொத்தமாக மாறி பாஜக முன்னிலையில் இருக்கிறது. ஏற்கெனவே 10 ஆண்டுகளாக ஹரியானாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக தொடந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருகிறது.
Published on

கடந்த வாரம் நிறைவடைந்த ஜம்மு காஷ்மீர், ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வெளியான முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலை 10 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியது.

மதியம் 12 மணி நிலவரப்படி ஆட்சி அமைக்கத் தேவையான 46 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக 49 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 35 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்ததுபோலவே காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி முன்னிலையில் இருக்கும் நிலையில் ஹரியானாவில் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகியிருக்கின்றன.

காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது முதலமைச்சராக இருக்கும் நயப் சைனி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் என தகவல்கள் வெளியாகின்றன.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com