மு.க.ஸ்டாலின் 20 நாள் அமெரிக்கா பயணம்… துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டுவருவதற்காக 20 நாள் பயணமாக வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்துக்கிடையே தனிப்பட்ட முறையில் மு.க.ஸ்டாலின் மருத்துவ ஆலோசனைகளையும் அமெரிக்காவில் மேற்கொள்ள இருக்கிறார். செப்டம்பர் 14-ம் தேதி அதாவது அண்ணா பிறந்தநாளுக்கு முன்னதாக சென்னை திரும்புகிறார் ஸ்டாலின்.
முதலமைச்சர் கிட்டத்தட்ட 20 நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்பதால் ஆட்சி நிர்வாகத்தில் எந்த தொய்வும் இல்லாமல் வேலைகள் நடக்க உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க இருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று தலைமைச்செயலகத்தில் நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவது தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கியமான தருணம். அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்களை உதயநிதி ஸ்டாலின் சமாளிப்பாரா?!