நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் 2024 : ஜாக்பாட் அள்ளிய பீகார், ஆந்திரா… சென்னை மெட்ரோ, தமிழ்நாட்டை மறந்த நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமனின் உரையில் விசாகப்பட்டிணம் - சென்னை இடையேயான தொழில்துறை சிறப்பு மண்டலத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதைத்தாண்டி சென்னை குறித்தோ, தமிழ்நாடு குறித்தோ எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
Published on

மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிகாலத்துக்கான முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் பெரிய அளவில் மக்களுக்கோ, தொழில்நிறுவனங்களுக்கோ உதவாத ஒரு பட்ஜெட்டை அறிவித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. மகிழ்ச்சி தரும் எந்த அறிவிப்பும் இல்லாததால் பங்குச்சந்தையும் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

நாட்டில் 28 மாநிலங்களில் இருக்கும் நிலையில் மோடி ஆட்சி தொடரக் காரணமாக இருக்கும் நித்திஷ் குமாரின் பீகார், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. பீகாருக்கு 26 ஆயிரம் கோடி சிறப்பு நிதியும், ஆந்திராவுக்கு 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

நிர்மலா சீதாராமன்,  இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி
நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி

நிர்மலா சீதாராமன் உரையில் விசாகப்பட்டிணம் - சென்னை இடையேயான தொழில்துறை சிறப்பு மண்டலத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதைத்தாண்டி சென்னை குறித்தோ, தமிழ்நாடு குறித்தோ எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. 

மொபைல் போன்கள் அதனைச் சார்ந்த பொருட்களுக்கு 15 சதவிகிதமும், தங்கம், பிளாட்டினம், வெள்ளிக்கு 6 சதவிகிதமும் சுங்கவரி குறைகிறது என்பதைத்தாண்டி பெரிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் எதுவுமே இடம்பெறவில்லை. அசாம், பீகார், உத்தராகண்ட் மாநிலங்கள் வெள்ளத்தால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த நிவாரணமும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. அதேப்போல் சென்னை மெட்ரோ ரயிலுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

தனி நபர் வருமான வரி விதிப்பில் புதிய முறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமானவரி இல்லை. ஆனால், 12 முதல் 15 மற்றும் 15 லட்சத்துக்கு மேல் அதாவது மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு 20 முதல் 30 சதவிகிதம் வருமான வரி கட்டவேண்டும். அதாவது மாத சம்பளம் 1 லட்சம் பெறுபவர்கள் ஆண்டுக்கு 20 சதவிகிதம் வருமான வரி கட்ட வேண்டும். அதேப்போல் 1.25 லட்சம் மாத சம்பளம் பெறுபவர்கள் ஆண்டுக்கு 30 சதவிகிதம் வருமான வரி கட்ட வேண்டும்.

பீகார், ஆந்திராவைத் தாண்டி எந்த தரப்பையுமே இந்த பட்ஜெட் திருப்திப்படுத்தவில்லை!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com