உதயநிதி ஸ்டாலின், அன்னியூர் சிவா
உதயநிதி ஸ்டாலின், அன்னியூர் சிவா

மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்குமா விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… கடும் நெருக்கடி தரும் பாமக!

வன்னியர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பாமக கைப்பற்றிவிடும் என்பதால், தலித்துகள் சிறுபான்மையினர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அதைப்பொருத்துதான் இந்தத் தேர்தலில் வெற்றியிருக்கிறது. அதனால்தான் அன்புமணி ராமதாஸே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கையெடுத்து கும்பிடுகிறார்.
Published on

தமிழ்நாட்டின் மிக முக்கியமான இடைத்தேர்தலாக மாறியிருக்கிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜுலை 13-ம் தேதியும் நடைபெறுகிறது. 

29 வேட்பாளர்கள்!

ஆளும் திமுக கட்சி சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா என மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதுவரை இந்தத் தொகுதியில் கூட்டணி வேட்பாளரோடும், தனியாகவும் என இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கும் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்திருக்கிறது. அதேபோல் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவும், அதிமுகவோடு சேர்ந்து புறக்கணித்திருக்கிறது. 

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

பிரசாரம் ஓய்வு!

இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட, திமுக அமைச்சர்கள் பலரும் இந்தத்தொகுதியில் முகாமிட்டு வெற்றிக்காக பிரசாரம் செய்துவருகிறார்கள். அதேப்போல் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், பாமகவின் தோழமைக் கட்சித்தலைவரான அண்ணாமலை உள்ளிட்ட பலரும் பாமக வேட்பாளருக்காக பிரசாரம் செய்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அபிநயாவுக்காக பல பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். 

https://newstremor.com/politics/vikravandi-by-election-tamil-nadu-2024

வெற்றி யாருக்கு?
வன்னியர்களும், தலித்துகளும் அதிகம் வாழும் தொகுதி விக்கிரவாண்டி. வன்னியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் திமுக, பாமக, நாம் தமிழர் என மூன்று முக்கிய கட்சிகளுமே வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்களைத்தான் களமிறக்கியுள்ளன. கடந்த தேர்தலில் 93,730 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருந்தது திமுக. அதிமுக 84,157 வாக்குகள் பெற்று 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத்தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணியில் இருந்தது. ஆனால், 2024 இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில் இருந்து விலகி பாமக- பிஜேபி கூட்டணி போட்டியிடுகிறது. இதனால் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் வாக்குகள் யாருக்குப் போகும் என்பதைப் பொறுத்தே வெற்றியிருக்கிறது.

சீமான்
சீமான்

மூன்று வாரங்களுக்கு முன்பு வரை திமுக சுலபமாக இந்த இடைத்தேர்தலை வென்றுவிடும் என்கிற சூழலே இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது என்பதே கள நிலவரம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 60-க்கும் மேற்பட்டவர்கள்(பெரும்பான்மையினர் தலித்துகள்) இறந்துபோனது, சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது என இரண்டு பெரிய சம்பவங்களும் தலித் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள்.

வன்னியர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பாமக கைப்பற்றிவிடும் என்பதால், தலித்துகள் சிறுபான்மையினர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அதைப்பொருத்துதான் இந்தத் தேர்தலில் வெற்றியிருக்கிறது.

இருந்தாலும் இடைத்தேர்தலில் இறுதிவரை பணபலமும், அதிகாரபலமும் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால் ஆளும்கட்சியே வெற்றுபெற அதிக வாய்ப்பிருக்கிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com