ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா கூட்டணிக்கு கிடைத்திருக்கும் மெகா இடைத்தேர்தல் வெற்றி… குழப்பத்தில் பாஜக?!

உத்தராகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது.
Published on

இந்தியாவில் மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் விக்கிரவாண்டி உள்பட 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணின் வெற்றிபெற, இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றிருக்கிறது. பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் கட்சியை ஒரு சுயேட்சை வேட்பாளர் தோற்கடித்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 3 தொகுதிகள், உத்தரகாண்டில் 2 தொகுதிகள், பீகார், பஞ்சாப், மத்தியபிரதேசம், தமிழ்நாட்டில் தலா 1 தொகுதி என மொத்தம் 13 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

இதில் ஆச்சரியமூட்டும் விதமாக உத்தராகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு நடைபெற்ற இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கிறது. அதேப்போல் ஹிமாச்சல் பிரேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவர அதில் மூன்றில் இரண்டு தொகுதிகளை காங்கிரஸும், ஒரு தொகுதியில் பாஜகவும் வென்றிருக்கிறது.

பீகாரில் ஜனதா தள் கட்சியின் நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில் ஜனதா தள் வேட்பாளரை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையவைத்திருக்கிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர். மற்ற தொகுதிகளில் அந்தந்த மாநிலங்களில் ஆட்சிக் கட்டிலில் இருக்கும் கட்சிகளின் வேட்பாளர்களே வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

உத்தராகாண்டில் 2 தொகுதிகளிலுமே பாஜக தோல்வியடைந்திருப்பது பாஜக மேலிடத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த ஆண்டு மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டசமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணியின் வெற்றி பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com