ரஜினி, ஸ்டாலின், உதயநிதி
ரஜினி, ஸ்டாலின், உதயநிதி

ரஜினியை அநாகரிகமாக விமர்சித்த துரைமுருகன்... மன்னிப்பு கேட்ட உதயநிதி... கண்டித்த ஸ்டாலின்!

தன்னை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்படுகிறார் என ரஜினிகாந்த் பேசியதாக கடுப்பில் இருந்த துரைமுருகனிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகேட்க அதற்கு மிகவும் அநாகரிகமான முறையில் பதில் அளித்திருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்.
Published on

தன்னை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் மிகவும் கஷ்டப்படுகிறார் என ரஜினிகாந்த் பேசியதாக கடுப்பில் இருந்த துரைமுருகனிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகேட்க அதற்கு மிகவும் அநாகரிகமான முறையில் பதில் அளித்திருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

நேற்று முன்தினம் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ''கலைஞர் எனும் தாய்'' புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு  பேசிய நடிகர் ரஜினிகாந்த் சீனியர் கட்சிக்காரர்களை சமாளிக்க மு.க.ஸ்டாலின் படும்பாட்டை ஜாலியாக குறிப்பிட்டு பேசினார். அப்போது ஒரு உதாரணத்துக்காக அமைச்சர் துரைமுருகன் பேரைச்சொன்னார் ரஜினி.

’'சீனியர் ஸ்டூடன்ட்ஸை சமாளிக்கிறது கஷ்டம். அதுவும் நல்ல ரேங்க் எடுத்துப் பாஸ் ஆனாலும் கிளாஸைவிட்டுப்போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறவங்களை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். துரைமுருகன் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர். அவரிடம் ‘இப்படி பண்ணியிருக்கோம் நல்லாயிருக்கா’ எனக்கேட்டால் ‘சந்தோஷம்' எனச்சொல்வார். நல்லாயிருக்குன்னு சந்தோஷம்னு சொல்றாரா, ‘என்னடா இப்படி பண்ணுறீங்களே’ன்னு சந்தோஷம்னு சொல்றாரான்னு தெரியாது. ஸ்டாலின் சார் ஹாட்ஸ் ஆஃப் டு யூ'’ என ஜாலியாகப் பேசினார். இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அத்தனைப்பேருமே சிரித்தனர். மேடையில் இருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுமே சிரித்து, ரஜினியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னார். 

இந்நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் தனது சொந்த தொகுதியான வேலூரில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்தனர். அப்போது ஒரு நிருபர் ரஜினிகாந்த் சொன்னது பற்றி கேட்க, 

ரஜினி, ஸ்டாலின், உதயநிதி
ரஜினி, ஸ்டாலின், உதயநிதி

‘’மூத்த நடிகன் எல்லாம் வயசாகிப்போயி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து, சாகுறு நிலைமையிலயும் நடிக்கிறதுனாலதான் இளைஞர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்காமப் போகுது'’ என பதில் அளித்தார். அப்போது உடன் இருந்த சில கட்சிக்காரர்கள் மற்றும் துரைமுருகனின் மகனும், எம்பியுமான கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் சிரித்தனர். இது திமுக தலைமைக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பேட்டி வெளியான சிறிது நேரத்திலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் துரைமுருகனை போனில் அழைத்து கண்டித்திருப்பதாகவும், தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ரஜினியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com