சீமான்
சீமான்

விஜய்யை கடுமையாகத் தாக்கிய சீமான் : ‘’கூமுட்டை… லாரியில் அடிபட்டு செத்துடுவ… It's Very Wrong Bro’’

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.
Published on

தமிழ்நாடு நாள் தின பொதுக்கூட்டம் நேற்று சென்னை பெரம்பூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். இந்த உரை முழுக்கவே நடிகர் விஜய்யை தாக்கிப்பேசுவதாகவே இருந்தது.

‘’நீ வச்ச கட்அவுட் நான் வரைஞ்சது தம்பி.. படத்தை வச்சியே.. வேலுநாச்சியார் யார்னு சொல்லு தம்பி.. பெரியார் கிட்ட பெண்ணுரிமை பெற்றேன்னு சொல்ற…72 வயசுல பெரியார் கல்யாணம் பண்ணார். அவர்கிட்ட என்ன பெண்ணுரிமை பெற்ற… இது கொள்கை இல்லை தம்பி. ஒண்ணு அந்த பக்கம் நில்லு. நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு இறந்துவிடுவாய். 

இது நடுநிலை அல்ல கொடுநிலை. What Bro… It's Very Wrong Bro. சினிமால பேசுற மாதிரி பஞ்சு டயலாக் இல்ல.. நெஞ்சு டயலாக். தம்பி நான் குட்டி கதை சொல்பவன் அல்ல. வரலாற்றை கற்பிக்க வந்தவன். எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது.

சீமான்
சீமான்

வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா? வேலு நாச்சியார் யார் என்று சொல்லு தம்பி. ப்ரோ இது ட்ரைலர் தான் ப்ரோ…மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுப்பேன் என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை கருப்பட்டிக்கு எப்படி பால் வரும்.?

நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும், நாங்கள் படிச்சு PhD பெற்றுவிட்டோம். நீங்கள் சங்க இலக்கியத்தை இனிமேல்தான் எங்கே இருக்கிறது இலக்கியம் என்று தேடணும். ஆனால் சங்க இலக்கியத்தில் வரும் பாண்டிய நெடுஞ்செழியனின் பேரன், பேத்திகள் நாங்கள் தம்பி.

தவெக கொள்கையின் அடிப்படையே தவறு, விஜய் கூறுவது கொள்கையல்ல, கூமுட்டை. ஒன்று சாம்பார் என்று சொல்லு, இல்ல கருவாடு என்று சொல்லு… அதென்ன கருவாட்டு சாம்பார்?’’ என விஜய்யின் பெயரை மட்டும் நேரடியாகச் சொல்லாமல் கடுமையாகப் பேசினார் சீமான்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com