செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

‘’நீ ஒரு ஐபிஎஸ்-ஆ... மன்னிப்பு கேள்!’’ - அண்ணாமலைக்கு எதிராக கொந்தளித்த செல்வப்பெருந்தகை!

தினம் தினம் அண்ணாமலையின் பிரஸ்மீட்டும், அதற்கு எதிர்ப்பு பிரஸ்மீட்டுமாக போய்க்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசியல்.
Published on

படுகொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்று நேற்று அஞ்சலி செலுத்தினார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம் ஒரு செய்தியாளர் ''தமிழக பாஜகவில் அண்ணாமலை ரவுடிகளை கட்சியில் சேர்த்துவைத்திருப்பதாக காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருக்கிறாரே'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை ‘’செல்வப்பெருந்தகை முன்னாள் ரவுடி ஷீட்டர் என்கிற முறையில் அவருக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கலாம். நான் ரவுடி ஷீட்டர் இல்லைன்றதால எனக்குத்தெரியல. தமிழ்நாட்டில் பாஜக கட்சியில் ரவுடிகளுக்கு இடம் இல்லை’’ என பேட்டியளித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடிகள் லிஸ்ட்டில் இருந்தவர் என அண்ணாமலைப் பேசியது சலசலப்பை உண்டு செய்தது.

அண்ணாமலை
அண்ணாமலை

இதற்கு பதில் தரும் வகையில் இன்று காலை செய்தியாளர்களை சத்யமூர்த்தி பவனில் சந்தித்தார் செல்வப்பெருந்தகை. கோபத்தில் அண்ணாமலையை ஒருமையிலும் பேசினார். ‘’என்னை கேரெக்டர் அசாசினேஷன் செய்திருக்கிறார் அண்ணாமலை. அதற்கு நான் புகார் அளித்தால் அவருடைய  நிலமை என்னவாகும். எத்தனை ஆண்டுகள் சிறை என அண்ணாமலைக்குத் தெரியுமா… அரசியல் நாகரீகம் கருதி நான் வேண்டாம் என நினைக்கிறேன். காந்தியை படுகொலை செய்தீர்கள். அவர் வழியில் வந்த எங்களைப் போன்றவர்களை குணப் படுகொலை (கேரெக்டர் அசாசினேஷன்) செய்கிறீர்கள்.

அண்ணாமலைக்கு கேரெக்டர் அசாசினேஷனுக்கும், அசாசினேஷனுக்கும் என்ன வித்தியாசம் எனத்தெரியுமா. ஒருவனை கேரெக்டர் அசாசினேஷன் செய்வதைவிட கொலை செய்வதே மேல் என அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் படிச்சிருக்கியா நீ… நீ உத்தபுத்திரன்தானே… 1 லட்சம் ஏழைகளிடம் சிறுக சிறுகப் பணம் வாங்கி ஆருத்ரா மோசடி வழக்கில் 2400 கோடி ரூபாய் ஏமாற்றியிருக்கிறார்கள். இந்த வழக்கில் கைதான ஷரிஷ் என்பவர் ‘’15 கோடி வாங்கிட்டு எங்களை பாஜக கட்சியில சேர்த்தாங்க’’ என பேட்டி அளித்திருக்கிறார். போலீஸ் என்பவன் குற்றவாளியைக் கண்டால் தூரமாக நில்லுங்கள் என்று சொல்லுவான். ஆனால், அண்ணாமலை எல்லா ரவுடிகளையும் கட்சியில் சேர்த்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மூன்று தவறுகளை செய்திருக்கிறார் அண்ணாமலை. ஒன்று வெறுப்புப் பேச்சு. இரண்டாவது அவதூறு பேச்சு. மூன்றாவது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய பேச்சு. என்னைப்போய் ரவுடி ஷீட்டர்னு சொல்றியே… எங்கேயாவது ப்ரூவ் பண்ணமுடியுமா… இவர் ஒரு வழக்குல சம்பந்தப்பட்டிருக்கார்னு சொல்ல முடியுமா… நீ என்ன ஐபிஎஸ் படிச்சிருக்க… ஹிஸ்டரி ஷீட்டர் எனச்சொன்னதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்குத்தொடுப்பேன்’’ எனச்சொல்லியிருக்கிறார் செல்வப்பெருந்தகை!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com