சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

திருப்பதி லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு - சந்திரபாபு நாயுடு அதிரடி குற்றச்சாட்டு!

ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி திருத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார் ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
Published on

ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, YSR காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் (2019-2024) திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக அதிரடி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது சந்திரபாபு நாயுடு இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினார். இதற்கு YSR காங்கிரஸ் கட்சியிலிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

YSR காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்திருக்கிறார். ‘’இது முழுக்க முழுக்க தவறான செய்தி. அரசியல் லாபத்திற்காக நாயுடு கோயில் பிரசாதத்தின் புனிதத்தை இழிவுபடுத்துகிறார்'’ என குற்றம் சாட்டியுள்ளார். “ திருப்பதி வெங்கடாசலபதியின் முன் நானும், என் குடும்பமும் சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறோம். நாயுடுவும் தனது குடும்பத்துடன் அதைச் செய்யத் தயாரா?” என சவால் விடுத்துள்ளார் சுப்பா ரெட்டி.

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்
சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண்

கடந்த YSRCP ஆட்சியின் போது, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்து தெலுங்கு தேசம் கட்சி (TDP) பல முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதனால் நெய்யின் தரத்தை ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்கிறது தேவஸ்தான போர்டு. இதற்காக தேவஸ்தானம் ஒரு புதிய ஆய்வகத்தை நிறுவி, மைசூரில் உள்ள புகழ்பெற்ற பயிற்சி மையத்துடன் இணைந்து, பணியாளர்களுக்கு தரப் பரிசோதனைக்கு தேவையான பயிற்சிகளை கொடுத்துவருகிறது.

சந்திரபாபு நாயுடு
சினிமா டு அரசியல் : பவன் கல்யாணிடம் இருந்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்!

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் மட்டுமல்ல, வியாபார நோக்கமும் கொண்டது என ஜெகன் மோகன் கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சந்திரபாபு நாயுடு மனைவி ஹெரிடேஜ் என்கிற பெயரில் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். அதனால் திருப்பதியில் வழங்கப்படும் நெய்யுக்கான டெண்டர் தனக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டும் என்பதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு முன்வைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com