உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

''விஜய் என் நண்பர்தான்'' - பெரியார் அரசியல் குறித்து உதயநிதி கொடுத்த பதில்!

நடிகர் விஜய் நேற்று பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது பற்றியும், தனக்கு துணை முதலமைச்சர் பதவி குறித்து முடிவெடுப்பது பற்றியும் அமைச்சர் உதயநிதி பதில் கொடுத்திருக்கிறார்.
Published on

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி பவள விழாவும், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முப்பெரும் விழாவும் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் உரையாற்றினார். இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பெரியார் விருதுகளை வழங்கினார்.

இதனையடுத்து செம்படம்பர் 28-ம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பவள விழா பொதுக் கூட்டத்திற்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் கேட்ட கேள்விக்கு துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார். முழுக்க முழுக்க அது முதல்வரின் முடிவு தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

"என்னை துணை முதல்வராக்க வேண்டும் என தொண்டர்கள் சொல்வது அவர்களின் விருப்பம். தொண்டர்களின் விருப்பத்தை நேற்று தெரிவிக்கும் வகையில் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியிருந்தார். எல்லா அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகதான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. விஜய் என் நண்பர்தான். அவரது அரசியல் பயணித்திற்கு வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com