காவல்துறையின் கெடுபிடி... தவெக மாநாட்டை அக்டோபருக்குத் தள்ளிப்போடும் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை எனும் இடத்தில் செப்டம்பர் 23-ம் தேதி நடத்துவதற்காக போலீஸிடம் அனுமதி கேட்டிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த். நிபந்தனைகளுடன் போலீஸும் மாநாட்டுக்கு அனுமதி அளித்துவிட்டது.
50,000 பேர் வரை கலந்துகொள்ளலாம், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது, பெண்களுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்படவேண்டும், போதுமான பார்க்கிங் வசதிகள் இருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள்.சொ போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று விஜய் மாநாட்டுத் தேதியை அறிவிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. நாம் NewsTremor.com தளத்தில் மாநாடு தள்ளிப்போவதாக முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் போலீஸ் நிபந்தனைகளை செப்டம்பர் 23-க்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால் விஜய் அக்டோபருக்கு மாநாட்டுக்குத் தள்ளிப்போடலாம் எனக் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார். அநேகமாக அக்டோபர் 15-ம் தேதிக்கு மேல் தவெக-வின் முதல் மாநாடு நடைபெறும் எனத் தெரிகிறது.