தமிழக வெற்றிக் கழக மாநாடு
தமிழக வெற்றிக் கழக மாநாடு

தவெக மாநாடு : தொடங்கியது விஜய் மாநாடு.... 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பு!

விஜய் தொடங்கியிருக்கும் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.

கட்டுக்கடங்காத கூட்டம்!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் சிலருக்கு மயக்கம்; வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

3 மணிக்கே மாநாடு!

மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தவெக மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல்

விக்கிரவாண்டியில் டாஸ்மாக் கடைகள் மூடல்!

விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு தரப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லா பயணம்

தவெக மாநாட்டுக்கு வரும் வாகனங்களால் டிராஃபிக் நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓங்கூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் ஸீரோ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் பயணிக்கலாம்

2 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சிகள்

2 மணிக்கே கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார் விஜய். மாநாட்டு திடலுக்கு வந்துள்ள விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

தேசிய நெஞ்சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து!

பொது போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில் மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் மட்டும் 10 கி.மீ.க்கு காத்திருக்கின்றன.

விஜய் சேதுபதி வாழ்த்து!

''தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க,. தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள்'' - விஜய் சேதுபதி

19 தீர்மானங்கள்!

தவெக மாநாட்டில் விஜய் 19 தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்ற உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வு, மகளிர் பாதுகாப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு!

விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

''என்னுடைய நீண்ட கால நண்பர் விஜய். என்னுடைய முதல் சினிமா தயாரிப்பும் அவரோடு இணைந்துதான் தொடங்கியது. நண்பர் விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்'' - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மேடைக்கு வரும் தவெக நிர்வாகிகள்!

இன்னும் சற்று நேரத்தில் விஜய்யின் தவெக மாநாடு தொடங்கயிருக்கிறது!

பறை இசையுடன் மாநாடு தொடங்கியது!

விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பறை இசையுடன் தொடங்கியது. இன்னும் சற்றுநேரத்தில் மேடைக்கு வருகிறார் தவெக தலைவர் விஜய்!

இரு மொழிக் கொள்கை!

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை விஜய்யின் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. தமிழில் படித்தவர்களுக்கு அதிக முன்னிரிமை அளிக்க ஆவண செய்யப்படும் எனத்தகவல்.

மேடைக்கு வந்தார் விஜய்!

மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய். ராம்ப்பில் தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்து நடந்துவந்தார். தொண்டர்கள் கட்சிக்கொடியை விஜய்யை நோக்கி வீச அதை எடுத்து தோளில் அணிந்துகொள்கிறார் விஜய்

கொள்கை காணொலி!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை காணொலி வெளியீடப்பட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகள் என காணொலியில் வாசகங்கள். தற்போது 100 அடி உயரம் கொண்ட கொடியை ரிமோட் மூலம் ஏற்றிவைக்கிறார் விஜய்.

அறிவின் குரலில் கொள்கைப் பாடல்

ராப் பாடகர் அறிவின் குரலில் கொள்கை முழுக்கப் பாடல் ஒளிபரப்பு. வாகை வாகை வெற்றி வெற்றி எனப் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மதுரையில் தலைமைச் செயலக கிளை!

மதுரையில் தலைமைச்செயலக கிளை அமைக்கப்படும் என தவெக கூட்டத்தில் முன்மொழிவு! மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளுடன் தவெக மக்களுக்காக உழைக்கும்.

மாநிலப் பட்டியலில் கல்வி - தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் திட்டம்

தமிழே ஆட்சி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற நிலை உறுதி செய்யப்படும். தலைமை செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் தரப்படும். மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும். தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்.

logo
News Tremor
newstremor.com