இரண்டு அணிகளுமே அட்டாக்கிங் ஆட்டம் ஆடும் நிலையில் 20 நிமிடங்களைக் கடந்தும் இருதரப்பிலும் கோல் விழவில்லை. 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின் ஸ்ட்ரைக்கர் காய் ஹவர்ட்ஸ் அடித்த ஹெட்டரை ஸ்பெயினின் கோல் கீப்பர் யுனாய் சிமோன் தடுத்து நிறுத்திவிட்டார்.
ராபின் லு நார்மண்ட்
ஸ்பெயின் வீரர் ராபின் லு நார்மண்ட்டுக்கு ஃபவுல் காரணமாக நடுவர் மஞ்சள் அட்டை எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்.
ஸ்பெயின் 0 - 0 ஜெர்மனி
முதல் பாதி ஆட்டம் முடிவடைந்துவிட்ட நிலையில் ஸ்பெயின், ஜெர்மனி இரு அணிகளுமே கோல் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருக்கிறது!
ஸ்பெயின் முதல் கோல்!
லமைன் யமல்
16 வயதேயான லமைன் யமலின் அற்புதமான பாஸை கோல் ஆக்கியிருக்கிறார் டேனி ஆல்மோ!
ஜெர்மனி ஈக்குவலைசர்?!
ஸ்பெயினின் கோலை ஈக்குவலைஸ் செய்யப்போராடிவருகிறது ஜெர்மனி. இன்னும் ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருக்கும் நிலையில் ஆட்டம் பரபரப்பாக நடந்துவருகிறது!
களத்தில் தாமஸ் முல்லர்!
ஆட்டம் முடிய 10 நிமிடங்களே இருக்கும் நிலையில் ஜெர்மனியின் முன்னணி வீரர் தாமஸ் முல்லர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்!
ஸ்பெயின் 1-0 ஜெர்மனி... நழுவிய வாய்ப்பு!
ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக்கும் வாய்ப்பைத் தவறிவிட்டார் கய் ஹாவர்ட்ஸ்... யுனான் சிமான் மீண்டும் ஒருமுறை அற்புதமாக தடுத்து நிறுத்தியிருக்கிறார்!
ஜெர்மனியின் ஈக்குவலைசர்!
ஃப்ளோரியன் ரிட்ஸ்
ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் 89வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்திருக்கிறார் ஜெர்மனியின் 21 வயதேயான ஃப்ளோரியன் ரிட்ஸ்!
எக்ஸ்ட்ரா டைம்!
90 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்காததால் ஆட்டம் எக்ஸ்ட்ரா டைமுக்குச் சென்றிருக்கிறது. இந்த 30 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை என்றால் ஆட்டம் பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்குச் செல்லும்!
ஸ்பெயின் 2 - 1 ஜெர்மனி
எக்ஸ்ட்ரா டைம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில் ஆட்டத்தின் 119 நிமிடத்தில் கோல் அடித்தார் ஸ்பெயினின் மைக்கேல் மெரினோ!
அரையிறுதிக்கு ஸ்பெயின் தகுதி!
ஜெர்மனியை 2-1 என வீழ்த்தியதன் மூலம் யூரோ 2024 தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது ஸ்பெயின்!