இன்றைய போட்டியில் போர்ச்சுகல் தோல்வியடைந்தால் அது ரொனால்டோவின் கடைசி சர்வதேசப்போட்டியாக இருக்கலாம்.
போர்ச்சுகல் 0-0 பிரான்ஸ்
முதல் 10 நிமிடங்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் 0-0 என சமநிலையில் இருக்கிறது!
கோலை தடுத்த போர்ச்சுகல்!
பிரான்ஸ் வீரர் கேன்சிலோ கோல் போஸ்ட் நோக்கி அடித்தப்பந்தை தடுத்து போர்ச்சுகலை காப்பாற்றியிருக்கிறார் டியாகோ கோஸ்ட்டா!
எம்பாப்பேவின் முகத்தில் ஏன் கறுப்பு மாஸ்க்?
பிரான்ஸ் கேப்டன் கிலியன் கடந்த சில போட்டிகளாக முகத்தில் கறுப்பு மாஸ்க் அணிந்து விளையாடி வருகிறார். இன்றைய போட்டியிலும் அது தொடர்கிறது. காரணம் ஆஸ்திரியாவுக்கு எதிரான லீக் சுற்றின் முதல் போட்டியில் விளையாடும்போது எம்பாப்பேவின் மூக்கு உடைந்தது. மூக்கு காயம் காரணமாகத்தான் ஃபேஸ் மாஸ்க் அணிந்து ஆடுகிறார் எம்பாப்பே!
முதல் பாதி முடிந்தது... போர்ச்சுகல் 0-0 பிரான்ஸ்
போர்ச்சுகல் Vs பிரான்ஸ்
போர்ச்சுகலுக்கும், பிரான்ஸுக்கும் இடையேயான முதல் பாதி ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. போர்ச்சுகல், பிரான்ஸ் என இரு அணிகளுமே கோல் அடிக்க முயற்சித்தும் பலன் அளிக்காததால் 0-0 என ஆட்டம் சமநிலையில் இருக்கிறது!
கோல் இல்லாத ஆட்டம்!
ரொனால்டோ, எம்பாப்பே என கோல் மழை பொழியும் ஆட்டக்காரர்கள் இருந்தும் போர்ச்சுகல், பிரான்ஸ் இரு அணிகளுமே 90 நிமிடம், 30 நிமிட கூடுதல் நேரம் 120 நிமிட ஆட்டத்தில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் பெனால்ட்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றிருக்கிறது!
பிரான்ஸ்- போர்ச்சுகல் 1-1
முதல் ஷூட் அவுட்டில் பிரான்ஸுக்காக டெம்பிலி கோல் அடிக்க, போர்ச்சுகலுக்காக ரொனால்டோ கோல் அடித்துவிட்டார்!
2-2
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் இரண்டு அணி வீரர்களுமே தலா 2 - 2 கோல்கள் அடித்திருக்கிறார்கள்!
பிரான்ஸ் 3 - 2 போர்ச்சுகல்!
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் வாய்ப்பைத் தவறிவிட்டார் போர்ச்சுகல் வீரர் ஃபெலிக்ஸ்!
பிரான்ஸ் வெற்றி!
பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஒரு வாய்ப்பையும் தவறவிடாத பிரான்ஸ் வெற்றி. யூரோ 2024 தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.