Argentina vs Colombia : கோப்பையை வென்றது அர்ஜென்டினா... கொலம்பியாவை 1-0 என தோற்கடித்தது!
கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், கொலம்பியாவும் முதல் முறையாக மோதுகின்றன. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் நடக்க இருக்கும் இந்தப்போட்டி இந்திய நேரப்படி 5.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவேண்டிய ஆட்டம் ரசிகர்களின் கலவரத்தால் இன்னும் தொடங்கவில்லை!
அமெரிக்காவில் டிக்கெட் இல்லாமல் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் ஆட்டத்தை தொடங்கமுடியவில்லை. தற்போது இந்திய நேரப்படி காலை 6.45 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மிஸ் செய்த ஆல்வராஸ்!
ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே கோல் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார் அர்ஜென்டினா வீரர் ஆல்வராஸ். Gonzalo Montiel ஒரு கிராஸ் ஷாட் மூலம் Julián Álvarez-க்கு பந்தை அனுப்ப அதை கோல் நோக்கி அடித்த ஆல்வராஸின் ஷாட் மிஸ் ஆனது!
முதல் 20 நிமிடங்கள் - அர்ஜென்டினா 0 - 0 கொலம்பியா
முதல் 20 நிமிடங்களின் முடிவில் அர்ஜென்டினா கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தவறவிட ஆட்டம் 0-0 என சமநிலையில் இருக்கிறது!
தவறிய மெஸ்ஸியின் ஷாட்!
ஏஞ்சல் டி மரியாவின் க்ராஸ் பாஸை லியோனல் மெஸ்ஸி தனது இடது கால் ஷாட் மூலம் கோலாக்க முயன்றார். ஆனால், பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழையாமல் தவறியது!
அர்ஜென்டினா 0 - 0 கொலம்பியா
முதல் பாதி ஆட்டம் முடிவடைந்திருக்கும் நிலையில் கொலம்பியா, அர்ஜென்டினா இரு அணிகளுமே கோல் இல்லாமல் இருக்கின்றன. எதிர்பார்த்ததைவிட கொலம்பியாவின் டிஃபென்ஸ் வலுவாக இருப்பதால் கோல் அடிக்கமுடியாமல் தடுமாறுகிறது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா!
ஷகிராவின் இசை நிகழ்ச்சி!
முதல் பாதி ஆட்ட இடைவெளியில் பாப் பாடகி ஷகிராவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது!
கோல் இல்லை!
ஆட்டம் முடிய இன்னும் 20 நிமிடங்களே இருக்கும் நிலையில் அர்ஜென்டினா 0-0 கொலம்பியா என ஆட்டம் சமநிலையில் இருக்கிறது!
கதறியழுத மெஸ்ஸி காயம்!
மெஸ்ஸியின் கடைசி ஆட்டம் என கருதப்படும் கோபா அமெரிக்கா போட்டியில் காயமடைந்திருக்கிறார் மெஸ்ஸி. இதனால் ஆடுகளத்தில் அவர் அழுகையோடு வெளியேறினார்.
அர்ஜென்டினாவின் கோல்!
எக்ஸ்ட்ரா டைமில் ஆட்டம் சென்றுகொண்டிருக்க 112வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மார்ட்டினஸ் கோல் அடிக்க 1-0 என முன்னிலைப் பெற்றிருக்கிறது அர்ஜென்டினா!
அர்ஜென்டினா வெற்றி!
மெஸ்ஸி
Argentina vs Colombia
லாடரோ மார்டினெஸின் எக்ஸ்ட்ரா டைம் கோலால் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா. இந்த தொடரில் ஐந்து கோல்கள் மற்றும் இறுதிப் போட்டியில் முக்கியமான கோல் அடித்து அர்ஜென்டினாவின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்திருக்கிறார் லாடரோ மார்டினஸ்.