யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடரில் ஆஸ்திரியா - பிரான்ஸ் அணிகள் மோதிய போட்டி இன்று அதிகாலை நடந்தது. ஆட்டத்தின் ஐந்து முக்கிய நிகழ்வுகள் இங்கே!
பிரான்ஸின் சூப்பர் ஸ்டாரான கிலியன் எம்பாப்பே வழக்கம்போல தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் பிரான்ஸூக்கு 1-0 என முன்னிலையைப் பெற்றுக்கொடுத்தார். எம்பாப்பே அடித்த கிராஸ் ஷாட்டை ஆஸ்திரிய வீரர் தலையில் தட்ட அது தவறுதலாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்து செல்ஃப் கோல் ஆனது. ஆனால், இரண்டு முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்பாப்பே வாய்ப்பைத் தவறவிட்டது கால்பந்து ரசிகர்கள் அனைவருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டதோடு மஞ்சள் கார்டு எச்சரிக்கையையும் பெற்றார் எம்பாப்பே. அதோடு ஏரியல் முட்டலில் எம்பாப்பேவின் மூக்கு உடைந்து காயமானது. இதனால் அடுத்தப்போட்டிக்குள் எம்பாப்பே தயாராகிவிடுவாரா அல்லது காயத்தால் விளையாட முடியாமல் போகுமோ என்றெல்லாம் கவலையில் மூழ்க ஆரம்பித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.
21 மாதங்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சர்வதேச கால்பந்து போட்டிக்குள் மீண்டும் விளையாட வந்திருக்கிறார் பிரான்ஸின் N'Golo Kante, 21 மாத இடைவெளிக்குப் பிறகு களத்துக்கு வந்தவர், சிறப்பான தற்காப்புத் திறமையையும், கட்டுக்கோப்பான அணுகுமுறையும் வெளிப்படுத்தி ஒரு அற்புதமான ஆட்டத்தை ஆடிக்காண்பித்தார்.
ஆஸ்திரியாவும் கோல் அடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. சிலமுறை பிரான்ஸின் டிஃபென்ஸை உடைத்துக்கொண்டு ஆஸ்திரிய வீரர்கள் நுழைந்தார்கள். கிறிஸ்டோப் பாம்கார்ட்னரின் க்ளோஸ்-ரேஞ்ச் ஷாட்டை பிரான்சின் கீப்பர் மைக் மைக்னன் தடுத்து ஆஸ்திரியாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார். அதேப்போல் சர்ச்சைக்குரிய நடுவர் முடிவால் ஆஸ்திரியாவுக்கு கிடைத்திருக்கவேண்டிய பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு பறிபோனது.
ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டம் மிகச்சிறப்பாக இல்லையென்றாலும் வெற்றி தந்த நம்பிக்கையில் அடுத்தப்போட்டிக்குள் நுழைகிறது பிரான்ஸ். அடுத்தப்போட்டியில் நெதர்லாந்தை வரும் சனிக்கிழமை(22-06-2024) சந்திக்கிறது பிரான்ஸ்.