வங்கதேச கிரிக்கெட் அணி
வங்கதேச கிரிக்கெட் அணி

ராவல்பிண்டி ரணம்... பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் இந்த வெற்றி அந்நாட்டு கிரிக்கெட் ரசிகனின் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
Published on

கலவரம், ஆட்சிக்கவிழ்ப்பு எனப் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் வங்கதேச மக்கள் இன்று சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். வங்கதேச கிரிக்கெட் அணிதான் மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இன்று. ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டை வென்ற வங்கதேச அணி, இன்று ராவல்பிண்டியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று 2-0 என பாகிஸ்தானை அவர்களின் சொந்த மண்ணிலேயே தோற்கடித்திருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற சூழலில், வங்கதேச வீரர்கள் பொறுப்புடனும், நிதானத்துடனும் விளையாடினர். ஜாகிர் ஹசனின் 40 ரன்கள், நஜ்முல் ஹொசேன் ஷான்டோவின் பக்குவமான 38 ரன்கள் மற்றும் மொமினுல் ஹக்கின் உறுதியான பங்களிப்போடு வங்கதேசம் வெற்றிபெற்றிருக்கிறது. 

பாகிஸ்தானுக்கு இந்தத்தோல்வி மிகவும் அவமானகரமானத் தோல்வியாக மாறியிருக்கிறது. அவர்கள் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெறவேயில்லை. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி வெற்றிக்குப் பின்னர், பாகிஸ்தான் ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளில் டிரா செய்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தற்போது வங்கதேசம் என எல்லா விசிட்டர்களிடமும் வெற்றியை இழந்திருக்கிறது பாகிஸ்தான். 

இந்த வெற்றியுடன் வங்கதேசம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி, இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. 

இந்த வெற்றி வெறும் ஒரு டெஸ்ட் தொடரின் முடிவல்ல, இது வங்கதேச கிரிக்கெட் வரலாற்றின் திருப்புமுனை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேறியிருக்கும் இந்த வெற்றி, வங்கதேசத்தின் பலம் மற்றும் வலிமையை உலகம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறது!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com