விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்கராஸ்... 28 கோடி பரிசு!
2023 விம்பிள்டனில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்த அல்கராஸ் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. ஆனால், 2024 இறுதிப்போட்டியில் 6-2, 6-2, 7-6 என நேர்செட்களில் வீழ்த்தி ஜோகோவிச்சின் ஆதிக்கதைக் கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறார் அல்கராஸ். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு 28.5 கோடி ரூபாய் பணம் பரிசாகக் கிடைத்திருக்கிறது.
யார் இந்த கார்லோஸ் அல்கராஸ்!
வெறும் 21 வயதேயான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் இரண்டு விம்பிள்டன், 1 யுஎஸ் ஓப்பன் என கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனைப்படைத்துவருகிறார். ஸ்பெயினின் முர்சியாவில் உள்ள எல் பால்மரில் பிறந்த அல்கராஸ், பவர்ஃபுல் செர்வ், டென்னிஸ் களத்தில் சுற்றிச்சுழலும் வேகம் மற்றும் தளறாத விடாமுயற்சி குணத்தால் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவருகிறார்.
ஆக்ரோஷமான பேஸ்லைன் ஆட்டத்துக்குப் பெயர் பெற்றவர் அல்கராஸ். வலுவான ஃபோர்ஹேண்ட் மற்றும் பேக்ஹேண்ட் மூலம் கோர்ட்டின் பின்பகுதியில் இருந்து விளையாடி புள்ளிகளைப் பெறுவது அல்கராஸின் ஸ்டைல்.
ஃபெடரர் - நடால் - ஜோகோவிச் என இந்த மூவருக்குப் பிறகு டென்னிஸ் உலகில் சிறந்த வீரர்கள் உருவாகவில்லை என்கிற விமர்சனங்கள் கார்லோஸ் அல்கராஸின் எழுச்சியின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. இளம் டென்னிஸ் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறார் அல்கராஸ்.
அல்கராஸின் ஆக்ரோஷ ஆட்டம் டென்னிஸ் உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது!