யூரோ 2024 : செர்பியாவை சரியவைத்த இங்கிலாந்தின் மூன்று சிங்கங்கள்!
பெஸ்ட் பெல்லிங்ஹாம்!
அட்டாக்கிங் ஆட்டம் ஆடவேண்டும் என முடிவெடுத்து களமிறங்கிய இங்கிலாந்து விசில் பறந்த தருணத்தில் இருந்தே செர்பியாவின் டிஃபென்ஸை உடைக்கும்வேலைகளில் இறங்கிவிட்டது. இதற்குப்பலனாக 13-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் பவர்ஃபுல் ஹெட்டர் மூலம் கோல் அடித்து இங்கிலாந்தை 1-0 என முன்னிலைப்பெறவைத்தார். முதல் பாதி ஆட்டம் முழுவதும் பெல்லிங்ஹாம் கொடுத்த நம்பிக்கையால் இங்கிலாந்து தொடர்ந்து தாக்குதல் ஆட்டம் ஆடியது.
மூன்று சிங்கங்கள்!
இங்கிலாந்து கால்பந்து எம்பளத்தில் உள்ள மூன்று சிங்கங்களைப்போல ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சகா (Bukayo Saka), கைல் வாக்கர்(Kyle Walker) என இந்த மூவர் சிங்கக் கூட்டணி முதல்பாதியின் பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தது. தொடர்ந்து கோல் அடிக்கும் முயற்சியிலேயே இங்கிலாந்தை இவர்கள் முன்னிலைப்படுத்திவைத்திருக்க, செர்பியாவால் டிஃபென்சிவ் ஆட்டமே ஆடமுடிந்தது.
செர்பியாவின் மறுமலர்ச்சி!
இரண்டாவது பாதியில் செர்பியா வலுவான எதிர்த்தாக்குதல் நடத்தியது. குறிப்பாக இவான் இலிக் களத்துக்கு வந்தப்பிறகு செர்பியாவின் ஆட்டம் சூடுபிடித்தது. Dusan Vlahovic மற்றும் மாற்று வீரர்களான Dusan Tadic மற்றும் Luka Jovic ஆகியோர் செர்பியாவின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர், இங்கிலாந்தின் பாதுகாப்பு படைக்கு அதிகமான வேலை கொடுத்தனர்.
தற்காப்பு அரண்!
செர்பியாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்த போதிலும், மார்க் குய்ஹி மற்றும் கீரன் டிரிப்பியர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை உள்ளடக்கிய இங்கிலாந்தின் டிஃபென்ஸ் பயங்கர ஸ்ட்ராங்காக இருந்தது. கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் செர்பியாயின் கோல் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார்.
அடுத்து என்ன?!
இங்கிலாந்து தங்கள் அடுத்த முதல் சுற்றுப் போட்டியில் டென்மார்க்கை எதிர்கொள்ள இருக்கிறது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நம்பிக்கையோடு களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்!