கிலியன் எம்பாப்பே Kylian Mbappé (பிரான்ஸ்)
பொசிஷன் : ஃபார்வேர்ட்/விங்கர்
சட்டை எண் : 10
வயது : 25
தற்போதைய கால்பந்து சூப்பர் ஸ்டாரான கிலியன் எம்பாப்பே பிரான்ஸை இந்தமுறை யூரோ கோப்பையை வெல்லவைப்பார் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் பிரான்ஸ் ரசிகர்கள். 2020 யூரோ கோப்பையில் முதல் ரவுண்டிலேயே வெளியேறியது பிரான்ஸ். சுவிட்சர்லாந்துக்கு எதிரான பெனால்ட்டி ஷூட் அவுட்டில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு பிரான்ஸ் வெளியேற காரணமாக இருந்த கிலியன் எம்பாப்பே இந்தமுறை பிரான்ஸ் கோப்பையை வெல்லக் காரணமாவார் என்கிற உற்சாகத்தில் இருக்கிறார்கள் இவரது ரசிகர்கள். காரணம் கடந்த 2022-23 சீசனில் மட்டும் 30 கோல்கள் அடித்து அசைக்கமுடியாத கால்பந்து வீரராக முன்னிலையில் இருக்கிறார் எம்பாப்பே.
பொசிஷன் : அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்/சென்ட்ரல் மிட்ஃபீல்டர்
சட்டை எண் : 7
வயது : 32
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கெவின் டி புருனே எம்பாப்பேக்கு அடுத்தபடியாக கால்பந்து ரசிகர்கள் அதிகம் ஃபாலோ செய்யும் வீரராக இருக்கிறார். யூரோப்பியன் லீக் போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டிக்காக ஆடும் கெவின் டி புருனே அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடுபவர். கோல் அடிப்பதைக் காட்டிலும் கோல் அசிஸ்ட்டில்தான் கெவின் டி புருனே தன் முழுத்திறமையையும் காட்டுவார். கடந்த 2020 யூரோ கோப்பையில் காலிறுதிப்போட்டிவரை பெல்ஜியம் முன்னேறக் காரணமாக இருந்தவர் கெவின் என்பது குறிப்பிடத்தக்கது.
பொசிஷன் : ஸ்ட்ரைக்கர்
சட்டை எண் : 9
வயது : 30
இங்கிலாந்து அணியின் சூப்பர் ஸ்ட்ரைக்கரான ஹேரி கேன் இந்த முறை கோப்பையை ஜெர்மெனியில் இருந்து தூக்கிவந்துவிடுவார் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். 2022-23 சீசனில் 27 கோல்கள் அடித்து எம்பாப்பேவுக்கு அடுத்த இடத்தைப்பிடித்திருந்தவர் ஹேரி கேன். 2020 யூரோ கோப்பையில் இறுதிப்போட்டிவரை இங்கிலாந்து முன்னேறக் காரணமாக இருந்தவர் ஹேரி கேன். டென்மார்க்குக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் இவர் அடித்த முக்கியமான கோலோடு சேர்த்து நான்கு கோல்கள் இத்தொடரில் ஹேரி கேன் அடித்திருந்தார்.
பொசிஷன் : ஸ்ட்ரைக்கர்
சட்டை எண் : 9
வயது : 35
போலாந்து அணியின் சென்ட்ரல் ஸ்ட்ரைக்கரான ராபர்ட் லீடான்ஸ்கி 2024 யூரோ கோப்பையில் கவனிக்க வேண்டிய முக்கியமான வீரர்களில் ஒருவர். கடந்த சீசனில் பேயர்ன் மியூனிக்கில் இருந்து பார்சிலோனா அணிக்கு இடம்பெயர்ந்த ராபர்ட் லீடான்ஸ்கியின் வயது 35. 2022-23 லா லிகா, சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 33 கோல்கள் அடித்து அசத்தியவர் லீடான்ஸ்கி. கடந்த யூரோ கோப்பை போட்டிகளிலும் 3 கோல்கள் அடித்திருந்தார்.
பொசிஷன் : சென்ட்ரல் மிட்ஃபீல்டர்/டிஃபென்சிவ் மிட்ஃபீல்டர்/ரைட் பேக்
சட்டை எண் : 6
வயது : 29
போட்டியை நடத்தும் ஜெர்மெனியின் ஸ்டார் பிளேயர் ஜோஷ்வா கிமிக். டிஃபென்ஸ், அஃபென்ஸ் என இரண்டிலும் இறங்கி ஆடக்கூடியவர் என்பது கிமிக்கின் கெத்து. பேயர்ன் மியூனிச் டீமுக்காக ஆடிவரும் கிமிச் புண்டஸ்லிகாவில் 5 கோல்கள் அடித்தவர் என்பதோடு பல கோல்களைத் தடுத்தவர்.
பொசிஷன் : சென்ட்ரல் மிட்ஃபீல்டர்/அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்
சட்டை எண் : 20
வயது : 21
21 வயதேயான பெட்ரி ஸ்பெயினின் கால்பந்து சூப்பர் ஸ்டாராக மாறிவருகிறார். லீக் போட்டிகளில் பார்சிலோனாவுக்காக ஆடிவரும் பெட்ரி, 2020 யூரோ கோப்பையில் ஸ்பெயின் அரையிறுதி வரை முன்னேற முக்கியக் காரணமாக இருந்தவர். பெட்ரியை இந்தமுறையும் அதிகமாக நம்பியிருக்கிறார்கள் ஸ்பெயின் ரசிகர்கள்.
பொசிஷன் : ஃபார்வேர்ட்/விங்கர்
சட்டை எண் : 7
வயது : 39
40 வயதை நெருங்கும் சிஆர்7-ன் கடைசி யூரோ கோப்பை கால்பந்து தொடராக 2024 யூரோ கோப்பை இருக்கும். கடந்த யூரோ கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றிலேயே போர்ச்சுகல் வெளியேறினாலும் ஐந்து கோல்கள் அடித்து அசத்தியிருந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ரொனால்டோ விளையாடுவதைப் பார்க்கும் கடைசி வாய்ப்பு என்பதால் எல்லா கண்களும் ரொனால்டோ மீதே இருக்கும்.
பொசிஷன் : ஸ்ட்ரைக்கர்
சட்டை எண் : 10
வயது : 31
லோன் மூலம் கடந்த சீசனில் இன்டர் மிலானுக்குத் தாவிய ரொமேலு லுக்காக்கு கடந்த 2022-23 சீசனில் 15 கோல்கள் அடித்திருந்தார். கடந்த 2020 யூரோ கோப்பையில் காலிறுதிவரை பெல்ஜியம் முன்னேறக் காரணமாக இருந்த லுக்காக்கு 4 கோல்கள் அடித்திருந்தார். களத்தில் லுக்காக்குவின் இருப்பே எதிர் அணி வீரர்களுக்கு கிலியை கிளப்பும்.
பொசிஷன் : கோல்கீப்பர்
சட்டை எண் : 1
வயது : 25
நடப்பு சாம்பியனான இத்தாலியின் நட்சத்திர வீரர் டொனாருமா. எப்போதுமே ஸ்ட்ரைக்கர்களோ, ஃபார்வேர்டு ப்ளேயர்களோதான் ஒரு அணியின் நட்சத்திர வீரர்களாக இருப்பார்கள். கோல்கீப்பர் சூப்பர் ஸ்டாராக இருக்கும்போதே புரிந்துகொள்ளலாம் டொனாருமாவின் மகிமையை. இத்தாலியின் அதிசயம் என ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். கடுமையான பிரஷரிலும் கூலாக விளையாடி வெற்றியைதேடித்தருவது டொனாருமாவின் ஸ்பெஷல். 2020 யூரோ கோப்பையின் தொடர்நாயகன் டொனாருமாதான். ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின் பெனால்ட்டி ஷூட் அவுட்டில் உண்மையாகவே அதிசயத்தை நிகழ்த்தினார் டொனாருமா.
பொசிஷன் : அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்/விங்கர்
சட்டை எண் : 11
வயது : 24
இங்கிலாந்தின் இளம் வீரரான ஃபில் ஃபோடனை ஹேரி கேனுக்கு அடுத்தபடியாக நம்புகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். டெக்னிக்கலாகவும், கிரியேட்டிவாகவும் விளையாடக்கூடியவர் எனப்பெயர் எடுத்தவர் ஃபோடன். டிரிப்லிங், பாசிங், கோல் ஸ்கோரிங் என மூன்றிலுமே ஃபோடன் புயல்போல செயல்படக்கூடியவர். மான்செஸ்டர் சிட்டிக்காக ஆடிவரும் ஃபோடன் இந்த யூரோ கோப்பையின் நாயகனாக இருப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.