கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை… சமூக வலைதளங்களில் 100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம்!
போர்ச்சுகல் கால்பந்து வீரரும், ஆறு முறை பாலன் டி ஓர் விருது வென்றவருமான கால்பந்து உலகின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். அதாவது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூ-டியூப் என அனைத்து சமூக வலைதளங்களையும் சேர்த்து 100 கோடி பேர் ஃபாலோ செய்யும் உலகின் முதல் பிரபலம் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார்.
"நாம் வரலாறு படைத்துவிட்டோம். 1 பில்லியன்(100 கோடி) ஃபாலோயர்கள்! இது வெறும் எண் மட்டுமல்ல - இது நம்முடைய பேரார்வம், முயற்சி மற்றும் விளையாட்டுக்கும் அதன் அப்பாற்பட்ட அன்பிற்குமான சான்று.
மடெய்ராவின் தெருக்களில் இருந்து உலகின் மிகப் பெரிய மேடைகள் வரை, நான் எப்போதும் என் குடும்பத்துக்காகவும் உங்களுக்காகவும் விளையாடி வருகிறேன். இப்போது நம்மில் 1 பில்லியன் பேர் ஒன்றாக நின்று கொண்டிருக்கிறோம்.
ரசிகர்களாகிய நீங்கள் நான் உயரத்தில் இருந்தபோதும், அப்படியே விழுந்தபோது வாழ்வின் ஒவ்வொரு படியிலும் என்னுடன் இருக்கிறீர்கள். இந்த பயணம் நம்முடைய பயணம். ஒன்றாக, நம்மால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு எல்லையே என்பதை நாம் நிரூபித்திருக்கிறோம்.
என்னை நம்புவதற்கும், உங்கள் ஆதரவுக்கும், என் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருப்பதற்கும் நன்றி. இன்னும் சிறந்தது பல வரவிருக்கிறது. நாம் தொடர்ந்து முன்னேறுவோம், வெற்றியடைவோம், வரலாறு படைப்போம்.’’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.