#INDvNZ
#INDvNZ

கடுமையான பிட்ச்சில் இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கு… வெற்றிபெறுமா அல்லது தொடரை இழக்குமா?! #INDvNZ

புனேவில் நடைபெற்றுவரும் இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் இறுதி கட்டத்தை நெருங்குகிறது.
Published on

மூன்றாவது நாளான இன்று காலை நியூஸிலாந்து 300 ரன்கள் முன்னிலையுடன் 5 விக்கெட்களோடு பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால், அடுத்த 58 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். 

இப்போது இந்தியாவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கிற்கு மிகவும் சவாலாக விளங்கும் பெளலிங் பேட்சில் 359 ரன்கள் என்பது எட்டுவதற்கு மிகவும் சவாலான இலக்கு. ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் இந்தியா 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. 

#INDvNZ
#INDvNZ

ஏற்கெனவே ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பெங்களூரு டெஸ்ட்டில் தோல்வியடைந்திருப்பதால், இந்த டெஸ்ட்டிலும் தோற்றால் தொடரை இழந்துவிடும்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com