நியூஸிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்… விக்கெட்களை அள்ளிய ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர்! #INDvNZ
இன்று டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் டாம் லேதம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட, கடந்த போட்டியில் நியூஸிலாந்துக்கு விக்கெட் மழையைப் பொழிந்த மிட்செல் சான்ட்னர் இன்றைய போட்டியில் இல்லை.
ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே நியூஸிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டெவன் கான்வேவின் விக்கெட்டை ஆகாஷ் தீப் எடுக்க, அதன்பிறகு வில்லியம் யங் மற்றும் டேரல் மிட்செல் ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடினர். வில்லியம் யங் 71 ரன்களில் அவுட் ஆக, டேரில் மிட்செல் 82 ரன்கள் அடித்தார்.
இந்திய பெளலர்களில் யங் விக்கெட் உள்பட ஜடேஜா 5 விக்கெட்கள் எடுக்க, மிட்செல் விக்கெட் உள்பட 4 விக்கெட்களை வாஷிங்டன் சுந்தர் எடுத்திருக்கிறார். நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.
இன்னும் 1 மணி நேர ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கியிருக்கிறது. ஜெய்ஸ்வாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவும் களத்தில் உள்ளனர்.