இந்திய ஹாக்கி அணி
இந்திய ஹாக்கி அணி

ஒலிம்பிக்ஸ் நாள் 3 : கடைசி நிமிட கோலால் தப்பித்த இந்திய ஹாக்கி அணி… மனிகா பத்ரா சாதனை!

ஒலிம்பிக்ஸின் மூன்றாவது நாளான நேற்று (29-07-2024) இந்தியா பங்கேற்ற போட்டிகளின் ஹைலைட்ஸ் இங்கே!

இந்தியாவின் 29 வயது டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ரவுண்ட் ஆஃப் 16 போட்டிக்குத் தகுதிபெற்று சாதனைப்படைத்திருக்கிறார்.

1. பேட்மிண்டன் : லக்‌ஷயா சென் வெற்றி

லக்‌ஷயா சென்
லக்‌ஷயா சென்

பேட்மிண்டன் லீக் சுற்றில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஆட்டத்தில் உத்திராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் லக்‌ஷயா சென்னும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜூலியன் கராக்கியும் மோதினர். இதில் லக்‌ஷயா சென் 21-19, 21-14 என்கிற நேர்செட்டில் வெற்றிபெற்றார்.

2. டேபிள் டென்னிஸ் : மனிகா பத்ரா சாதனை!

மனிகா பத்ரா
மனிகா பத்ரா

நேற்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் பிரான்ஸில் பிரித்திகே பவேடேவுடன் மோதினார் மனிகா பத்ரா. பிரிதிகே பவேடே புதுச்சேரியில் இருந்து பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தவர்கள். மனிகா - பிரிதிகே இருவருக்குமான போட்டியில் மனிகா 11-9, 11-6, 11-9, 11-7 என்கிற நேர்செட்டில் பிரிதிகேவை தோற்கடித்தார். இதன்மூலம் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதிபெற்றிருக்கும் முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் மனிகா.

3. பேட்மிண்டன் : அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ மீண்டும் தோல்வி

அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ
அஷ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ

பேட்மிண்டன் இரட்டையர் லீக் சுற்றுப்போட்டியில் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா - தனிஷா இணை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஜப்பானின் சிஹாரு ஷிதா - நமி மாட்சுயாமா இணையுடன் மோதியது. இதில் ஜப்பான் இணை இந்திய இணையை 21-11, 21-12 என நேர்செட்களில் வீழ்த்தியிருக்கிறது. லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டியே இருக்கும் நிலையில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறுவது சந்தேகம்தான். 

4. துப்பாக்கி சுடுதல் : மனு பாக்கர் - சரப்ஜோத்சிங் வெற்றி

மனு பாக்கர் - சரப்ஜோத்சிங்
மனு பாக்கர் - சரப்ஜோத்சிங்

10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி தகுதிச்சுற்றில் மூன்றாவது இடம்பிடித்து வெண்கலப்பதக்கதுக்கான போட்டியில் இன்று களம் காண்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு நடைபெற இருக்கும் இந்தப்போட்டியில் இந்திய ஜோடி, கொரிய ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.

5. துப்பாக்கி சுடுதல் : ரமிதா, பபுட்டா தோல்வி

ரமிதா ஜிண்டால்
ரமிதா ஜிண்டால்

நேற்று 10மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியின் ஆண்கள் மட்டும் பெண்கள் இறுதிப்போட்டி நடந்தது. இதில் ஆண்கள் போட்டியில் பங்கேற்ற அர்ஜுன் பபுதா நான்காவது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். அதேப்போல் பெண்கள் பிரிவில் ரமிதா ஏழாவது இடம்பிடித்து வெளியேறினார்.

6. வில்வித்தை : இந்திய ஆண்கள் அணி தோல்வி

வில்வித்தை போட்டியில் காலிறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி துருக்கி அணியை எதிர்கொண்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி 6-2 என தோல்வியைத் தழுவது. ஏற்கெனவே பெண்கள் அணி வெளியேறிவிட்ட நிலையில் ஆண்கள் அணியும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

7. ஹாக்கி : தப்பிப் பிழைத்த இந்தியா!

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி லீக் சுற்றில் அர்ஜென்டினாவுடன் மோதிய இந்திய அணி கடைசி நேர கோலால் 1-1 என மேட்சை டிரா செய்திருக்கிறது. நியூசிலாந்தை 3-2 என தோற்கடித்த இந்தியா அர்ஜென்டினாவுடன் 1-1 என டிரா செய்திருக்கிறது. இன்று அயர்லாந்துடன் இந்திய அணி மோதயிருக்கிறது.

8. டென்னிஸ் : ரோகன் போபண்ணா - ஶ்ரீராம் பாலாஜி தோல்வி!

ரோகன் போபண்ணா
ரோகன் போபண்ணா

ஆண்கள் இரட்டையர் போட்டிக்கான முதல் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின்  ரோகன் போபண்ணா - ஶ்ரீராம் பாலாஜி இணை பிரான்ஸின் கெயில் மான்ஃபில்ஸ் - எட்வர்ட் ரோஜர்-வாசெலின் இணையுடன் மோதியது. இதில் இந்திய அணி 5-7, 2-6 என நேர்செட்களில் வீழ்ந்தது. முதல் சுற்றுத் தோல்விக்குப் பிறகு ரோகன் போபண்ணா டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

logo
News Tremor
newstremor.com