ஒலிம்பிக்ஸ் 2024 : வெண்கலம் வென்றார் மனு பாக்கர்... இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறார் மனு பாக்கர். இறுதிப்போட்டி இந்திய நேரப்படி 3.30 மணிக்குத் தொடங்குகிறது. அதன் லைவ் அப்டேட்ஸ் இங்கே!
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 22 வயது மனு பாக்கர் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளான இன்று பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்றில் மூன்றாவது இடம்பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறார் மனு.
முதல் இடத்தில் மனு பாக்கர்
80.4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார் இந்தியாவின் மனு பாக்கர். தென் கொரியாவின் ஓ யே ஜின் 70.8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கிய மனு பாக்கர்
100.3 மூன்று புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் மனு பாக்கர்.
இரண்டாவது இடத்தில் மனு பாக்கர்!
இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் மனு பாக்கர். தென் கொரியாவின் கிம் யே-ஜி-யைவிட வெறும் 0.7 புள்ளிகளே பின்தங்கியிருகிறார் மனு பாக்கர். கிம் யே ஜி 131.7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்க மனு பாக்கர் 131.0 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்
தென் கொரிய வீராங்கனைகளுடன் கடுமையாக மோதும் மனு!
தென் கொரிய வீராங்கனைகள் கிம் யே-ஜி மற்றும் ஓ யே ஜின் இருவரும் இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு கடுமையானப் போட்டியை ஏற்படுத்திவருகிறார்கள்.
1 புள்ளி வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் மனு பாக்கர்!
தென் கொரிய வீராங்கனைகள் கிம் யே-ஜி மற்றும் ஓ யே ஜின் இருவரும் 172.3 மற்றும் 172.0 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் இருக்க, 171.0 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் மனு பாக்கர்.
மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது!
22 வயதான இந்தியாவின் மனு பாக்கருக்கு பதக்கம் உறுதியானது!
0.1 புள்ளி வித்தியாசத்தில் மூன்றாம் இடத்துக்குப்போனார் மனு பாக்கர்!
மனு பாக்கர்
2024 ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்திருக்கிறார் மனு பாக்கர். தென் கொரிய வீராங்கனைகளுடன் கடுமையாக மோதிய மனு பாக்கர் 221.7 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார்!