ஒலிம்பிக்ஸ் 2024 LIVE : பி.வி.சிந்து வெற்றி... நேர் செட்டில் மாலத்தீவு வீராங்கனையைத் தோற்கடித்தார்!
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து 2024 ஒலிம்பிக்ஸின் முதல் சுற்றுப் போட்டியில் மாலத்தீவின் ஃபாத்திமத் நபாஹா அப்துல் ரசாக் எனும் வீராங்கனையுடன் மோதுகிறார். இந்திய நேரப்படி 12.50 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தின் லைவ் அப்டேட்ஸ் இங்கே!
2016, 2020 என தொடர்ந்து அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கிறார் பி.வி.சிந்து. பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் சாதனையோடு தங்கம் வெல்வாரா சிந்து?! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிந்துவின் முதல் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது!
சிந்து 9-4 முன்னிலை!
முதல் செட்டில் வரிசையாக 5 புள்ளிகள் பெற்று 9-5 என முன்னிலைப் பெற்றுள்ளார் சிந்து!
சிந்து 14-5 என முன்னிலை!
தொடர்ந்து முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திவருகிறார் பி.வி.சிந்து. 14-5 என முன்னிலை!
முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து
இந்தியாவின் பி.வி.சிந்து முதல் செட்டை 21 - 9 என கைப்பற்றினார். 13 நிமிடங்களில் முதல் செட் ஆட்டம் முடிந்தது!
இரண்டாவது செட்டிலும் சிந்து முன்னிலை!
இரண்டாவது செட் ஆட்டம் ஆரம்பித்திருக்கும் நிலையில் 3-0 என சிந்து முன்னிலை!
சிந்து 7 - 3 என முன்னிலை!
சிந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறார். 7-3 என முன்னிலை!
இரண்டாவது செட்டில் 11-3 முன்னிலை!
இரண்டாவது செட்டில் 11-3 என முன்னிலைப் பெற்றிருக்கிறார் பி.வி.சிந்து.
சிந்து 17-6 என முன்னிலை!
இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கிறார். இரண்டாவது செட்டில் 17-6 என முன்னிலை!
சிந்து வெற்றி
இந்தியாவின் பி.வி.சிந்து, மாலத்தீவின் ஃபாத்திமத் அப்துல் ரசாக்கை 21-9, 21 - 6 என நேர் செட்டில் தோற்கடித்தார்.
புதன்கிழமை பி.வி.சிந்துவின் அடுத்தப்போட்டி!
குரூப் M பிரிவில் விளையாடிவரும் பி.வி.சிந்து அடுத்த லீக் சுற்று போட்டியில் எஸ்டோனியா வீராங்கணை கிறிஸ்டின் குபாவுடன் புதன்கிழமை (31-07-2024) மோதுகிறார். இந்தப்போட்டி இந்திய நேரப்படி 12.50 மணிக்குத் தொடங்கும்.