ராகுல் டிராவிட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிஇஓ ஜேக் லுஷ்
ராகுல் டிராவிட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிஇஓ ஜேக் லுஷ்

ராஜஸ்தான் ராயல்ஸில் மீண்டும் ராகுல் டிராவிட்… குமார சங்ககாராவுடன் இணைந்து செயல்படுவாரா?

கடந்த சில ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக இலங்கையின் குமார சங்ககாரா இருந்துவருகிறார். இவரின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடினாலும் கோப்பையை ராஜஸ்தானால் வெல்ல முடியவில்லை.
Published on

2024 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேசிய அணியைவிட்டுவிட்டு மீண்டும் ஐபிஎல் அணிக்குத் திரும்பியிருக்கிறார்.

பிசிசிஐ-ன் பயிற்சியாளர் ஆவதற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்தவர் ராகுல் டிராவிட். இவரது தலைமையில் ப்ளே ஆஃப் போட்டிகள் வரை முன்னேறியிருக்கிறது ராஜஸ்தான். கடந்த சில ஆண்டுகளாக அணியின் இயக்குநராக இலங்கையின் குமார சங்ககாரா இருந்துவருகிறார். இவரின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடினாலும் கோப்பையை ராஜஸ்தானால் வெல்ல முடியவில்லை.

ராகுல் டிராவிட், குமார சங்ககாரா
ராகுல் டிராவிட், குமார சங்ககாரா

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கோப்பையை ராஜஸ்தான் வென்றது மட்டுமே ஒரே வீர வரலாறு. அதனால் இந்த முறை அணிக்குள் மாற்றங்கள் செய்யவிரும்பிய ராஜஸ்தான் அணி நிர்வாகம் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டைக் கொண்டுவந்திருக்கிறது. டிராவிட் அணிக்குள் வந்தாலும் சங்ககாரா அணியின் இயக்குநராக தொடர்வார். இருவரும் இணைந்து செயல்படுவார்கள் என ராஜஸ்தான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

"புதிய சவாலை எதிர்கொள்வதற்கு இதுவே சரியான நேரம்" என்று பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் பேசியிருக்கிறார் ராகுல் டிராவிட். 

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூரு அணியில் இருந்தபோதில் இருந்தே அவருக்கு மென்ட்டாராக இருந்தவர் டிராவிட். ராஜஸ்தான் அணிக்குள் சஞ்சுவை கொண்டுவந்தவரும் டிராவிட்தான் என்பதால் இந்தக் கூட்டணி இந்தமுறை நிச்சயம் பந்தயம் அடிக்கும் என்கிறார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள். 

ஆனால், ஒரே உறையில் எப்படி இரண்டு கத்திகள் இருக்கமுடியும். வீரர்கள் சங்ககாரா சொல்வதைக் கேட்பார்களா, ராகுல் டிராவிட் சொல்வதைக் கேட்பார்களா, இந்த இரட்டைத் தலைமை அணிக்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

இரட்டைத் தலைமை ராஜஸ்தானுக்கு கைகொடுக்கமா?

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com