நேற்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் இன்று ரமிதா ஜிண்டால் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் போட்டியிடுகிறார்.
நான்காவது இடத்தில் ரமிதா!
52.5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார் ரமிதா!
பின்தங்கிய ரமிதா!
73 புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்குப் பின்தங்கினார் ரமிதா ஜிண்டால்.
மூன்றாவது இடம்!
ரமிதா ஜிண்டால் 94.3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்!
ஏழாவது இடத்துக்குப் பின் தங்கிய ரமிதா ஜிண்டால்!
104 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்குப் பின்தங்கினார் ரமிதா ஜிண்டால்!
வெளியேறினார் ரமிதா ஜிண்டால்!
145 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்குப் பின்தங்கிய ரமிதா ஜிண்டால் இறுதிப்போட்டியில் இருந்து வெளியேற்றம்!