முதல் பாதியிலேயே மூன்று கோல்கள்!
பெர்லினில் 70,000 ரசிகர்கள் குவிந்திருக்க அதில் 50 ஆயிரம் பேர் குரோஷிய ரசிகர்கள். ஸ்பெயினை தங்கள் அணி வீழ்த்தப்போகிறது என்கிற ஆர்வர்த்தில் வந்த ரசிகர்ளுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிகொடுத்தது அல்வாரோ மொராட்டா, ஃபேபியன் ரூயிஸ் மற்றும் டானி கார்வஜல் கூட்டணி. யூரோ கோப்பை போட்டிகளில் மொராட்டா தனது ஏழாவது கோலை அடித்து ஆலன் ஷீரர் மற்றும் அன்டோயின் கிரீஸ்மேன் சாதனையை சமன் செய்தார்.
அடுத்த மெஸ்ஸி என பார்சிலோனாவில் அடையாளம் காட்டப்படும் லாமன் யாமெல் (Lamine Yamal) மிக இளம் வயதில் யூரோ போட்டிகளில் ஆடும் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். 16 வயதேயான யாமலின் ஆட்டம் மிகவும் கவனிக்கத்தகுந்தாக இருந்தது. யாமல் அடித்த க்ராஸ்ஷாட்டைத்தான் கர்வாஜால் கோல் ஆக்கினார்.
விழுவதுபோல விழுந்து எழுவது என்கிற வியூகத்தைப் பின்பற்றி ஆடியது ஸ்பெயின். ஆரம்பத்திலேயே குரோஷியாவிடம் அடிபணிந்துவிட்டதுபோன்ற தோற்றத்தை தந்தது ஸ்பெயின். குரோஷியா ஸ்பெயினை ஈஸியாகக் கணிக்க சட்டென வியூக முறையை மாற்றி அதிரடி ஆட்டம் ஆட ஆரம்பித்துவிட்டது. ரோட்ரி, ரூயிஸ் மற்றும் பெட்ரி ஆகிய மூவரும் குரோஷியாவின் மிட்ஃபீல்ட்டை மிகச்சுலபமாக உடைத்து விளையாடினார்கள்.
குரோஷியா தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறியது. ஸ்பெயின் கோல் கீப்பரான உனாய் சிமோனின் சூப்பர் சேவ்கள் ஹங்கேரிக்கு கோல் கிடைக்கும் வாய்ப்புகளை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது. பென்லாட்டி வாய்ப்பு கிடைத்தும் குரோஷியாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்து சூப்பர் ஸ்டாரான உனாய் சிமோன்.
யாமல் மற்றும் நிக்கோ வில்லியம்ஸை விங்க்ஸில் களமிறக்கி, ஸ்பெயினின் முந்தைய ப்ளே ஸ்டைலின் கணிப்பை உடைத்தது ஸ்பெயினின் முதல் வெற்றி. கோல் போஸ்ட்டில் தூணாய் நிற்கும் உனோய் சிமோன் ஸ்பெயினுக்கு இரண்டாவது வெற்றி. ஜூலை 14 பெர்லினில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நிச்சயம் ஸ்பெயின் விளையாடும் என்பதை முதல் போட்டியிலேயே எதிர் அணிகளுக்கு சொல்லும்வகையில் வியூகங்களோடு விளையாடுவது ஸ்பெயினுக்கு மூன்றாவது வெற்றி.