ஒலிம்பிக்ஸ் 2024 : வெண்கலப் பதக்கம் வென்றார் ஸ்வப்னில் குசாலே… தோனியைப் போலவே ஒரு மாயாஜாலப் பயணம்!
துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் ஸ்விப்னில் குசாலே. இவரது தந்தையும் சகோதரனும் ஆசிரியர்கள். இவரின் தாயார் கம்பல்வாடி கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி. கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியைப்போலவே டிக்கெட் கலெக்டராகப் பணியைத் தொடங்கிய ஸ்வப்னிலுக்கு துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டி ஆர்வம் வர, பெற்றோரும் ஓகே சொல்ல, டிக்கெட் செக்கிங்கோடு துப்பாக்கியையும் கையில் எடுத்துவிட்டார் ஸ்விப்னில்.
2012 முதல் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ஸ்விப்னில். 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸின் தகுதிச்சுற்றில் மூன்று நிலைகளையும் கடந்து, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 451.4 புள்ளிகளுடன் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார் ஸ்வப்னில்.
"துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் நான் யாரையும் ரோல்மாடலாக பின்பற்றவில்லை. நான் கிரிக்கெட் வீரர் தோனியின் ரசிகன். அவர் இந்தியாவின் கேப்டனாக, வீரராக டென்ஷன் ஆகாமல் கூலாக, அமைதியாக இருப்பது பிடிக்கும். அதை நானும் பின்பற்றவேண்டும் என முயற்சிப்பேன். நானும் ஒரு டிக்கெட் கலெக்டர் என்பதால் தோனியோடு மிகவும் கனெக்ட் ஆகிவிட்டேன்" என்று சொல்லியிருக்கிறார் குசாலே.
2015 முதல் குசாலே மத்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். pro, standing மற்றும் kneeling மூன்றிலுமே சிறப்பாக சுட்ட குசாலே பதக்கத்தை வென்றிருக்கிறார்.
ஒலிம்பிக் பதக்கதைப் பெற்றுத்தந்திருக்கும் ஸ்விப்னில் குசாலேவுக்கு வாழ்த்துகள்!