Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
AUSvIND

AUSvIND : வெற்றியை முடிவு செய்யப்போவது கோலியோ, மெக்ஸ்வெல்லோ அல்ல… இந்த இருவர்தான்?!

இன்று இந்தியா ஆஸ்திரேலியா போட்டி நடந்து இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்து, நாளை ஆப்கானிஸ்தான் மிக அதிக ரன்ரேட்டில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். அதனால், இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் மிக முக்கியமானது!
Published on
Summary
  • போட்டி விவரம்!

    • அணிகள் :  ஆஸ்திரேலியா vs இந்தியா

    • இடம் : செயின்ட் லூசியா

    • தேதி & நேரம் : ஜூன் 24, இரவு 8 IST (உள்ளூர் நேரம் காலை 10.30மணி)

    • போட்டி : T20 உலகக் கோப்பை 2024, சூப்பர் 8, குரூப் 1

கழுகின் பார்வையில்!

மழை ஆபத்து : இன்று இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற இருக்கிறது. ஆனால், இங்கு இன்று (24-06-2024) காலை 10 முதல் 4 மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் போட்டி முழுமையாக நடக்குமா என்பது சந்தேகமே!

Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
விராட் கோலி, ரோஹித் ஷர்மா

ஆப்கானிஸ்தான் ஆபத்து!

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன. வங்கதேசம் இந்தியா ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுக்கு எதிராகவும் தோல்வியடைந்துவிட்டதால் அவர்களுக்கு அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கு வங்கதேசத்துடன் நாளை ஒரு ஆட்டம் இருக்கிறது. இதில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால், இன்று மழைபெய்து ஆட்டம் ரத்தானால் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். ஒருவேளை இன்று இந்தியா ஆஸ்திரேலியா போட்டி நடந்து இந்தியா அவமானகரமான தோல்வியை சந்தித்து, நாளை ஆப்கானிஸ்தான் மிக அதிக ரன்ரேட்டில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும். அதனால், இந்தியா, ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் மிக முக்கியமானது!

இந்தியா Vs ஆஸ்திரேலியா

பேட்டிங் பலம் : ஆஸ்திரேலியா - டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்).

  1.  மகிழ்ச்சி : அனுபவம் மற்றும் பவர் ஹிட்டர்களின் கலவையுடன் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டர் பயமுறுத்துவதாக இருக்கிறது.

  2.  கவலை : கேப்டன் மிட்செல் மார்ஷின் சமீபத்திய ஃபார்ம் (ஆறு இன்னிங்ஸ்களில் 88 ரன்கள்) கவலையளிக்கிறது. அதேப்போல் வெஸ்ட் இண்டீஸ் பிட்ச்சுகள் ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை.

Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
ஹர்திக் பாண்டியா

பேட்டிங் பலம் : இந்தியா - ரோகித் ஷர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா

  1. மகிழ்ச்சி : ஆறு பேட்ஸ்மேன்கள் கொண்ட ஸ்ட்ராங் பேட்டிங் லைன் அப்போடு இருக்கிறது இந்தியா. விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பன்ட் மூவருமே எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்குத் திரும்பலாம். சூர்யகுமார் யாதவ் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஏற்கெனவே அட்டகாசமாக ஆடியிருக்கிறார்.

  2.  கவலை : பவர்பிளே ஓவர்களில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இடது கை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள சிரமப்படுவது.

 பெளலிங் அட்டாக்

ஆஸ்திரேலியா : பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்/ஆஷ்டன் அகர், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

 மகிழ்ச்சி : ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் போன்ற மேட்ச்-வின்னர்களுடன் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலைக் கொண்டிருக்கிறது. 

 கவலை : மிட்செல் ஸ்டார்க்கை சேர்ப்பதா அல்லது கூடுதல் சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகருக்கு இடம்தருவதா என்கிற குழப்பம்.

Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ்

இந்தியா : அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா.

 மகிழ்ச்சி : திறமையான சுழற்பந்து வீச்சாளர்களுடன் வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலுமே சமமான அட்டாக்கை கொண்டிருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அர்ஷ்தீப் சிங்.

 கவலை : சில போட்டிகளில் லைன் அண்ட் லெங்க்தை தவறிவிடும் அர்ஷ்தீப் சிங்.

கவனிக்க வேண்டிய முக்கிய வீரர்கள்

ஆஸ்திரேலியா: 

  • மிட்செல் மார்ஷ் : இவர் ஃபார்முக்கு திரும்ப வேண்டும். செயின்ட் லூசியாவின் பேட்டிங்கிற்கு ஏற்ற ஆடுகளம் மார்ஷின் ஆக்ரோஷமான ஆட்டமுறைக்கு உதவும்.

  •  கிளென் மேக்ஸ்வெல்: பவர்பிளேவில் ரோஹித் மற்றும் கோலிக்கு எதிராக இவரது ஆஃப்ஸ்பின் முக்கியமானதாக இருக்கும்.

இந்தியா :

  • அர்ஷ்தீப் சிங் : முக்கியமான தருணங்களில், ப்ரஷர் சூழலில் விக்கெட் வீழ்த்தக்கூடியவர். அதேசமயம் ரன்களை வாரி வழங்கும் ஆபத்தும் இருக்கிறது.

  •  ஹர்திக் பாண்டியா : வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக, இந்தியாவின் பெளலிங் அட்டாக்கை சமப்படுத்துவதில் பாண்டியாவின் பர்ஃபாமென்ஸ் முக்கியமானது.

Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
அர்ஷ்தீப் சிங்

வியூகங்கள்

ஆஸ்திரேலியா

  • பவர்பிளேவில் இடது கை சுழலுக்கு எதிராக ரோஹித் மற்றும் கோலியின் வீக்னஸைப் பயன்படுத்த ஆஷ்டன் அகரைத் தேர்வு செய்யலாம்.

  • இந்தியாவின் டாப் ஆர்டருக்கு எதிராக ஸ்கோரிங் விகிதத்தைக் கட்டுப்படுத்த கிளென் மேக்ஸ்வெல்லின் ஆஃப்ஸ்பின்னை ஆரம்பத்திலேயே பயன்படுத்த வேண்டும்.

இந்தியா

  • 3-3 என்கிற ஃபார்மேட்டிலேயே இந்தியாவின் அட்டாக் இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர்களை வீழ்த்த அக்ஸர், ஜடேஜா, குல்தீப் என இந்தியா மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்வேண்டும்.

  • அர்ஷ்தீப்தான் இந்தியாவின் முக்கிய பெளலராக இருப்பார். இவர் விக்கெட்கள் எடுத்தால் இந்தியாவுக்கு சாதகம். வள்ளலாக மாறி ரன்களை வழங்கினார் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்.

பிட்ச் :

செயின்ட் லூசியா இந்த T20 உலகக் கோப்பையில் பேட்டிங் ம்ற்றும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சாக இருக்கிறது.

Get ready for a thrilling encounter as Australia takes on India in the T20 World Cup 2024 in St Lucia.
இந்திய கிரிக்கெட் அணி

வெற்றி யாருக்கு?

வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு, இதற்கு நடுவே மழையின் குறுக்கீடு என இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி பரபரப்பான சூழலுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அமைக்கப்போகும் வியூகங்களும், இந்தியாவின் வேகப்பந்து - சுழற்பந்து என்கிற சமமான பெளலிங் அட்டாக்குமே வெற்றியை உறுதி செய்யும். ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றிபெறுவதற்கே அதிக சாதகங்கள் உள்ளன.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com