லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலுமே வென்று தோல்வியடையாத அணியாக இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு வந்திருந்தாலும் ஆப்கானிஸ்தானை பழைய கத்துக்குட்டி அணிபோல டீல் செய்யமுடியாது. ஆப்கானிஸ்தான் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே திறமையான வீரர்களைக் கொண்டிருக்கிறது. அதனால் கீழ்கண்ட 5 விஷயங்களிலும் ரோஹித் ஷர்மா கவனம் செலுத்தவேண்டும்.
ஏன் இது முக்கியமானது : பவர்ஃபுல் பேட்டிங், தரமான பெளலிங் என இருந்தாலும் அணியின் ஃபீல்டிங் சரியில்லை என்றால் எப்பேர்பட்ட அணியாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் தோற்கும். ஏனென்றால் ஃபீல்டிங்தான் பெரும்பாலும் 20/20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் முடிவையே மாற்றியமைக்கிறது. டிராப் கேட்சுகளும், மிஸ்ஃபீல்டிங்கும் அணிக்குள் பிளவை ஏற்படுத்துவது மட்டுமல்ல, எதிர் அணிக்கு சாதகமாக முடிவை மாற்றிவிடும்.
தவறைத் தவிர்க்க : இந்தியா தனது மிகச்சிறந்த பீல்டிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தவேண்டும். எந்த ஒரு கேட்ச் மற்றும் ரன்-அவுட் வாய்ப்பையும் வீணடிக்க கூடாது. நான்கு ரன்களை மூன்று ரன்களாகவும், மூன்று ரன்களை இரண்டு ரன்களாகவும் குறைக்கும் அளவுக்கு ஃபீல்டிங் பயரங்கர ஷார்ப்பாக இருக்கவேண்டும்.
ஏன் இது முக்கியமானது: உலகளவில் இன்று மிகச்சிறந்த ஸ்பின்னர்களைக் கொண்டிருப்பது ஆப்கானிஸ்தான் அணிதான். ரஷித் கானின் லெக் ஸ்பின் மற்றும் நூர் அஹ்மத்தின் ஸ்பின் வேரியஷன்கள், குறிப்பாக டர்ன் ஆகும் பார்படாஸ் ஆடுகளத்தில் ஆபத்தானது.
தவறைத் தவிர்க்க : இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தெளிவான வியூகம் அமைத்திருந்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் வலையில் இருந்து தப்பிக்கமுடியும்.
இது ஏன் முக்கியமானது : பேட்டிங் ஆர்டர் போட்டியின் தன்மையைப் பொறுத்து மாற்றத்துக்கு உட்பட்டதுதான். ஆனால், மாற்றங்களுக்குப் பின்னால் வியூகம் இருக்க வேண்டும். முக்கியமான தருணங்களில் ஃபார்மில் இல்லாத வீரர்களை களத்தில் இறக்குவதும், ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேன்களை களம் இறக்காமல்விடுவதும் சரிவுக்கு வழிவகுக்கும்.
தவறைத் தவிர்க்க : போட்டிச் சூழலின் அடிப்படையில் பேட்டிங் ஆர்டருக்கான தெளிவான உத்தியை கேப்டன் ரோஹித் ஷர்மா கொண்டிருக்க வேண்டும். ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு கிரீஸில் இருக்க போதுமான நேரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப பேட்டிங் ஆர்டரில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.
ஏன் இது முக்கியமானது : ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பவர்ப்ளேவில் பொளந்துகட்டும் எண்ணத்துடனேயே களத்தில் இறங்கும். பந்துவீச்சு மாற்றங்களை தவறாக செய்வது அல்லது குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை அதிகமாக நம்புவது ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை களத்தில் செட்டிலாக அனுமதித்துவிடும்.
தவறைத் தவிர்க்க : ரோஹித் ஷர்மா தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி பெளலிங் ரொட்டேஷனை சரியாகச் செய்யவேண்டும். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை செட்டில் ஆகவிடாமல் செய்ய வேகப்பந்து வீச்சையும், ஸ்பின்னையும் மாறி மாறி பயன்படுத்தவேண்டும். முக்கியமான தருணங்களில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவை கொண்டுவருவது முக்கியம்.
ஏன் இது முக்கியமானது: ஆப்கானிஸ்தான் இப்போதுதான் வளர்ந்துவரும் அணிபோலத்தெரியலாம். ஆனால், களத்தில் அவர்களுடைய பர்ஃபாமென்ஸ் பெரிய அணிகளுக்கு நிகராக இருக்கிறது. கேப்டனும் சுழற்பந்துவீச்சாளருமான ரஷித் கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபரூக்கி போன்ற முக்கிய வீரர்கள் சிறந்த ஃபார்மில் இருப்பதால் அவர்களை சமாளிக்க இந்தியா வியூகம் வகுக்கவேண்டும்.
தவறைத் தவிர்க்க : ஆப்கானிஸ்தானின் திறமைகளை இந்தியா மதித்து, ஆஸ்திரேலியாவுடன் ஆடுவதுபோன்ற அதே தீவிரத்துடனும் கவனத்துடனும் இந்தப்போட்டியை அணுக வேண்டும். கேப்டன் ரோஹித் ஷர்மா தொடங்கி பாண்டியாவரை ஆப்கானிஸ்தானே என மெத்தனமாக ஆடினால் ஆபத்து.