AUSvIND
AUSvIND

இந்தியா வெற்றி... 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி #AUSvIND

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி செயின்ட் லூசியாவில் மழையின் குறுக்கீடுகளுக்கு இடையே நடந்துவருகிறது.

20 பந்துகளில் அதிரடி காட்டிய ரோஹித்

விராட் கோலி டக் அவுட் ஆக, இந்தியாவின் கேப்டன் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்திருக்கிறார். இந்தியா பவர்ப்ளேவின்(6 ஓவர்கள்) முடிவில் 1 விக்கெட்டை இழந்து 60 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது. ரோஹித் ஷர்மாவும், ரிஷப் பன்ட்டும் களத்தில் இருக்கிறார்கள்.

சிக்ஸர்களில் டீல் செய்த ரோஹித்...பன்ட்டைத் தூக்கிய ஸ்டாய்னிஸ்!

மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வீசிய எட்டாவது ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் என ரோஹித் பறக்கவிட, இந்த ஓவரின் கடைசிப்பந்தில் ரிஷப் பன்ட்டை பெவிலியனுக்கு அனுப்பினார் ஸ்டாய்னிஸ். பன்ட் 14 பந்துகளில் 15 ரன்கள் அடித்திருந்தார். ரோஹித் ஷர்மா 29 பந்துகளில் 76 ரன்கள் குவித்து களத்தில் நிற்கிறார்

ரோஹித் மேஜிக்!

நான் வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என்பதுபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் ஃபார்முக்கு வந்து தெறிக்கவிடுகிறார் ரோஹித் ஷர்மா. 10 ஓவர்களின் முடிவில் இந்தியா 114 ரன்கள் எடுத்திருக்கிறது. ரோஹித் ஷர்மா 89 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

ரோஹித் ஷர்மா அவுட்!

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும் ஆஸ்திரேலிய பெளலர்களை டீல் செய்துகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டார் மிட்செல் ஸ்டார்க். 41 பந்துகளில் 92 ரன்கள் அடித்திருக்கிறார் ரோஹித். இதில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்!

13 ஓவர்களில் 142 ரன்கள்... பவர்ஃபுல் பொசிஷனில் இந்தியா!

13 ஓவர்களில் மூன்று விக்கெட்டை இழந்து 142 ரன்களுடன் பவர்ஃபுல்லாக இருக்கிறது இந்திய அணி. சூர்ய குமார் யாதவும், ஷிவம் துபேவும் களத்தில் இருக்கிறார்கள்!

150 ரன்களைக் கடந்த இந்தியா!

13.24 ஓவர்களில் சூர்யகுமார் யாதவின் சிக்ஸர் மூலம் 150 ரன்களைக் கடந்தது இந்தியா.

சூர்ய குமாரையும் பெவிலியனுக்கு அனுப்பிய ஸ்டார்க்

31 ரன்களில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவை ஒரு வைடு பந்தைப்போட்டு அவுட் ஆக்கியிருக்கிறார் ஸ்டார்க். ஆப் ஸ்டம்புக்கு ரொம்ப வெளியே போடப்பட்ட பந்து துரத்திச்சென்று அடித்து கீப்பர் வேடிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருக்கிறார் பன்ட்

துபேவின் கேட்சைத் தவறவிட்ட மிட்செல் மார்ஷ்!

ஸாம்பாவின் பெளலிங்கில் எளிதாகப் பிடிக்கவேண்டிய கேட்சை கேப்டன் மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். இந்தியா 17 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.

ஸ்டாய்னிஸை சுளுக்கெடுக்கும் பாண்டியா

19வது ஓவரை வீசிக்கொண்டிருக்கும் ஸ்டாய்னிஸின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. ஆனால், அடுத்த இரண்டு பந்துகளில் ஷிவம் துபேவை தூக்கிவிட்டார் ஸ்டாய்னிஸ். துபே 22 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அவுட் ஆகியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு 206 ரன்கள் இலக்கு!

20 ஓவர்களின் முடிவில் 205 ரன்கள் குவித்திருக்கிறது இந்தியா. ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 92 ரன்கள் அடிக்க, சூர்ய குமார் யாதவ் 16 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார். மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஸ்டாய்னிஸ் இதே 4 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

காற்றுக்கு நன்றி!

செயின்ட் லூசியாவில் மழைக்கான அறிகுறிகளுடன் பலத்த காற்று வீசுவது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு குறிப்பாக ரோஹித் ஷர்மாவுக்கு சாதகமாக அமைந்தது. சில கேட்ச் ஆகியிருக்கவேண்டிய ஷாட்கள்கூட காற்றின் உதவியால் சிக்ஸர் ஆனது.

4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் ஜோஷ் ஹேசல்வுட்

ஹெட் & மார்ஷ் கூட்டணி!

ஆஸ்திரேலியா பவர்ப்ளேவில் 65 ரன்கள் அடித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருக்கிறது. டிராவிஸ் ஹெட் 12 பந்துகளில் 26 ரன்களுடனும், மார்ஷ் 18 பந்துகளில் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்!

இந்தியா வெற்றி!

அர்ஷதீப் சிங், குல்தீப் யாதவ், பும்ராவின் சிறப்பான பந்துவீச்சு இந்தியாவின் 206 ரன் இலக்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நெருங்கமுடியாமல் செய்தது. அர்ஷ்தீப் 3 விக்கெட்கள் வீழ்த்தியதோடு, 4 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். குல்தீப் யாதவும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 43 பந்துகளீல் 76 ரன்கள் அடித்தார்.

logo
News Tremor
newstremor.com