இந்தியா தென்னாப்பிரிக்கா இரு அணிகளுமே இந்த உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இந்தியா எல்லா போட்டிகளிலுமே பெரிய போராட்டம் இல்லாமல் வெற்றிபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, நேபாளம் என சிறிய அணிகளுடனேயே பயங்கர போராட்டத்துக்குப்பிறகுதான் வெற்றிபெற்றது.
இன்றைய போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உள்ளது. மழையின் குறுக்கீடுகள் இருக்கலாம். ஆட்டத்தையே பாதிக்கும் அளவுக்கு மழை இருக்காது என்பதே வானிலை அறிக்கை சொல்லும் செய்தி!
டாஸ் வென்ற ரோஹித் ஷர்மார் முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அரையிறுதிப்போட்டியில் விளையாடிய அதே அணி விளையாடுகிறது.
2014, 2016, 2022 என மூன்று டி20 உலகக்கோப்பை போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா விளையாடியிருக்கிறது. இதில் முறையே ரோஹித் ஷர்மா 24,43, 27 ரன்கள் அடித்திருக்கிறார். இதே போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி 72,89, 50 ரன்கள் அடித்திருக்கிறார். நாக் அவுட் போட்டிகளில் கோலியின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாகவே இருப்பதால் இன்றைய போட்டியில் கோலி ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்
ஃபுல் ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. முதல் ஓவரிலேயே மூன்று பவுண்டரிகளுடன் ஆட்டத்தை தொடங்கியிருகிறார். முதல் ஓவர் முடிவில் இந்தியா 15 ரன்கள் அடித்திருக்கிறது!
இரண்டு பவுண்டரிகளுடன் இரண்டாவது ஓவரை ஆரம்பித்த ரோஹித்தின் இன்னிங்ஸை நான்காவது பந்தில் முடித்துவிட்டார் கேஷவ் மகாராஜ்! 9 ரன்களில் ஆட்டம் இழந்தார் ரோஹித்!
ரிஷப் பன்ட் இரண்டாவது பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருக்கிறார். இந்தியா இரண்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை இழந்துவிட்டது!
ஆரம்பத்திலேயே தடுமாறிய சூர்யகுமார் அவுட் ஆகியிருக்கிறார். ரபடா சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்! பவர்பிளேயில் தென்னாப்பிரிக்காவுக்கான மூன்றாவது விக்கெட்டை எடுத்திருக்கிறார் ரபாடா. சூர்யகுமார் லெக்-சைடுக்கு மேல் அடிக்கும் அவரது வழக்கமான ஷாட்ட்டையே அடிக்க கிளாசனிடம் கேட்ச் கொடுத்துவிட்டார்.
பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் இந்தியா 45 ரன்கள் அடித்திருக்கிறது. கோலி 25 ரன்களுடன் களத்தில் இருப்பதே இந்தியாவுக்கு ஆறுதலான செய்தி.
Over 8 – India 59-3 (கோலி 29, அக்சர் - 18)
மார்க்ரமின் இந்த ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியா இன்னும் அட்டாக்கிங் மோடில்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறார் அக்ஸர்!
10 ஓவர்களுக்குள் தென்னாப்பிரிக்காவின் ஆறாவது பெளலரை இறக்கிவிட்டார் எய்டன் மார்க்ரம். தப்ரிஸ் ஷம்ஸி இப்போது பந்து வீசுகிறார்!
பத்து ஓவர்களின் முடிவில் 75 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது இந்தியா. அக்ஸர் கோலிக்கு பலமாக இருந்து இந்தியாவின் ஸ்ட்ரைக் ரேட்டை காப்பாற்றியிருக்கிறார்.
31 பந்துகளில் 47 ரன்கள் அடித்த அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆனார்.
15 ஓவர்களில் 118 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியா. களத்தில் கோலி 46 ரன்களுடன் இருக்கிறார்!
சிக்ஸருடன் அரை சதம் அடித்திருகிறார் கோலி.
18 ஓவர்களின் முடிவில் இந்தியா 150 ரன்களைக் கடந்திருக்கிறது. கோலி 64 ரன்களுடனும் ஷிவம் துபே 22 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.
76 ரன்களில் அவுட் ஆகியிருக்கிறார் கோலி. சரியாக இறுதிப்போட்டியில் ஃபார்முக்கு வந்தவர் 76 ரன்கள் அடித்து மார்க்கோ ஜேன்சனில் பெளலிங்கில் அவுட் ஆகியிருகிறார்!
20 ஓவர்களில் 176 ரன்கள் அடித்திருக்கிறது இந்தியா. ரோஹித், பன்ட், சூர்யகுமார் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனபோதும் கோலி களத்தில் நின்று 76 ரன்கள் அடித்து இந்தியா 176 ரன்களைத் தொட காரணமாக இருந்திருக்கிறார். கோலியுடன் பார்ட்னர்ட்ஷிப் போட்டு 47 ரன்கள் அடித்து உறுதுணையாக நின்றவர் அக்சர் பட்டேல்
பவர்ப்ளே ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்களை இழந்து 42 ரன்கள் அடித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. டி காக் 20 ரன்களோடு களத்தில் இருக்கிறார்.
After a match-winning catch against Australia and a superb bowling display in the semi-finals, @akshar2026's fine knock today kept the momentum going for India.
— Sachin Tendulkar (@sachin_rt) June 29, 2024
Some players accelerate at the start, others do so at the end. @imVkohli paced his innings well today. He stitched…
டிகாக்குடன் சேர்ந்து 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ஸ்டப்ஸை அவுட்டாக்கினார் அக்சர் பட்டேல். ஸ்டப்ஸ் ஸ்வீப் விளையாட முயன்று, மூன்று ஸ்டம்புகளையும் அக்சருக்கு காட்டை அக்சரின் ஃபுல் லென்த் பால் மிடில் ஸ்டம்ப்பைத் தாக்கியது!.
10 ஓவர்களின் முடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. குவின்டன், க்ளாசன் என இரண்டு முக்கியமான பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும் நிலையில் வெற்றிக்கு 60 பந்துகளில் 96 ரன்கள் தேவை!
க்ளாசன் சிக்ஸர்களாக விளாச 12 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா 100 ரன்களைக் கடந்திருக்கிறது. எக்ஸ்ட்ரா கவரில் க்ளாசன் அடித்த சிக்ஸர் செம மாஸ். கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பெளலர் மாற்றங்கள் க்ளாசன், க்வின்டன் கூட்டணியிடம் எடுபடாமல் இருக்கிறது.
டிகாக்கின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார் அர்ஷதீப் சிங். முதல் பாலில் டிகாக் சிக்ஸர் அடித்தே அதே இடத்தில் குல்தீப் யாதவை ஃபீல்டிங்கில் நிறுத்த டி காக் ஃபீல்டரை கவனிக்காமல் ஆடி அவுட்.
தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 9 பந்துகளில் 19 ரன்கள் எடுக்கவேண்டும்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஹர்திக் பாண்டிய கடைசி ஓவரை வீச இருக்கிறார்!
முதல் பந்திலேயே மில்லரை பவுண்டரி லைனில் கேட்ச்சாக்கி அவுட் செய்திருக்கிறார் பாண்டியா.
7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா உலகக்கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்கிற நிலையில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மில்லர், ரபடா என இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றிபெறவைத்திருக்கிறார் பாண்டியா!
அக்ஸர் பட்டேலின் ஒரே ஓவரில் 24 ரன்களை க்ளாசன் அடிக்க, கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கா வெற்றிபெறும் என்கிற சூழலே உருவானது. 18 பந்துகளில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 22 ரன்களே தேவை என்கிற சூழலில் தனது இறுதி ஓவரை வீசவந்தார் ஜஸ்பிரித் பும்ரா. இந்த ஓவேரில் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்ததோடு மார்க்கோ ஜேன்சனின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே அப்படியே இந்தியா பக்கம் திருப்பிவிட்டார் பும்ரா!
‘’இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை. இதைத்தான் நாங்கள் சாதிக்க விரும்பினோம். சில நாட்கள் நாம் நினைப்பபோல ஆடமுடியாது. ஆனால், மாற்றம் நிச்சயம் நிகழும். இறைவன் மிகப் பெரியவன். இந்தியாவுக்கு மிக முக்கியமான நாளில் நான் சரியாக பேட்டிங் செய்தேன் என்பது மனநிறைவாக இருக்கிறது. கோப்பையை கைகளில் ஏந்த விரும்பினேன். கட்டாயப்படுத்துவதை விட சூழ்நிலையை மதிக்க நினைத்தேன். அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. அற்புதமான வீரர்கள் இந்திய அணியை முன்னோக்கி அழைத்துச்செல்வார்கள்.
‘’இன்று மிகவும் அமைதியாக இருக்க முயன்றேன். இந்த நாளுக்காக, இந்த கோப்பையை வெல்வதற்காகத்தான் விளையாடுகிறோம். இது முக்கியமான நாள். இந்த நாளில் வெற்றிக்கு நீங்கள் அதிகமான உழைப்பைக் கொடுக்க வேண்டும், போட்டி முழுவதும் நான் மிகவும் தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தேன். என் உச்சபட்ச மனநிலையில் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தைப் பற்றி மட்டுமே யோசிப்பேன்.18-வது ஓவரில் லெங்த் பந்துகள்தான் வீச நினைத்தேன். ஆனால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக ஆரம்பித்தது. உடனே அதைப்பயன்படுத்திக்கொண்டேன்.
Congratulations to Team India on a spectacular World Cup Victory and a phenomenal performance throughout the tournament!
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2024
Surya, what a brilliant catch! Rohit, this win is a testament to your leadership. Rahul, I know team India will miss your guidance.
The spectacular Men in… pic.twitter.com/lkYlu33egb