வினேஷ் போகத் : ‘’உங்கள் கனவு, என் துணிவு எல்லாம் உடைந்துவிட்டது!'’
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத்தின் இறுதிப்போட்டிக்கான ஆட்டத்தை இந்தியாவே எதிர்பார்த்த நிலையில், அதிக எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது உலக மல்யுத்த சம்மேளனம்.
50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட வினேஷ் போகத்தின் எடை இறுதிப்போட்டிக்கான கட் ஆஃப் நேரத்தின்போது 50 கிலோவுக்கும் அதிகமாக 100 கிராம் கூடியிருந்ததால் ‘’விதி எல்லோருக்கும் பொதுவானது’’ எனச்சொல்லி தகுதி நீக்கம் செய்தது போட்டியை நடத்தும் ஒலிம்பிக் கமிட்டி.
இந்நிலையில் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் 29 வயதான வினேஷ் போகத்.
‘’எனக்கு எதிரான மல்யுத்தப் போட்டியில் அம்மா வென்றுவிட்டார்…. நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னியுங்கள். உங்கள் கனவு, என் துணிவு எல்லாம் உடைந்து விட்டது.எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம் 2001-2024. மன்னிக்கவும்…. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்'’ என்று தெரிவித்துள்ளார்.
வினேஷ் போகத்தின் முடிவு அவரது ரசிகர்களையும், இந்திய மக்களையும் மனமுடையச் செய்துள்ளது. இருப்பினும் இந்த ஓய்வு வினேஷ் போகத்துக்கு ஆறுதலையும், தேறுதலையும் அளிக்கும் என நம்புவோம்!