வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

‘’குறி வெச்சா இரை விழணும்'’... 7 விக்கெட்களை தட்டித் தூக்கிய வாஷிங்டன் சுந்தர்!

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். பெங்களூரு டெஸ்ட்டில் இந்தியா சந்தித்த அவமானகரமானத் தோல்விதான் வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்குவாடுக்குள் கொண்டுவரப்பட்டு, ப்ளேயிங் லெவனுக்குள்ளும் வாஷிங்டன் சுந்தரை இடம்பிடிக்க வைத்தது.
Published on

இன்று காலை புனே டெஸ்ட்டில் டாஸில் தோற்றதும் ரோஷித் ஷர்மாவிடம் அணியில் மாற்றங்கள் செய்திருக்கிறீர்களா எனக் கேட்டார் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி. உடனடியாக ‘’ஆமாம்… மூன்று மாற்றங்கள்’’ என்றவர், வாஷிங்டன் சுந்தர் ப்ளேயிங் லெவனுக்குள் வந்திருக்கும் விஷயத்தைச் சொன்னார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். பெங்களூரு டெஸ்ட்டில் இந்தியா சந்தித்த அவமானகரமானத் தோல்விதான் வெறும் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்குவாடுக்குள் கொண்டுவரப்பட்டு, ப்ளேயிங் லெவனுக்குள்ளும் வாஷிங்டன் சுந்தரை இடம்பிடிக்க வைத்தது.

ரஞ்சி போட்டியில் டெல்லிக்கு எதிராக 152 ரன்கள் குவித்ததோடு 6 விக்கெட்களையும் எடுத்திருந்தார் சுந்தர். அந்த பர்ஃபாமென்ஸ்தான் அவரை அணிக்குள் கொண்டுவந்தது.

வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தர்

ஆனால், ''இந்தியா பதட்டத்தில், பயத்தில் முடிவெடுத்திருக்கிறது.குல்தீப் யாதவ் அல்லது அக்ஸர் பட்டேல் என இந்த இருவரில் ஒருவர்தான் அணிக்குள் இடம்பிடித்திருக்கவேண்டும். வாஷிங்டன் சுந்தர் தேவையில்லாத ஆணி'' என்றுதான் விமர்சனங்கள் வந்தன. ஆனால், அத்தனை விமர்சனங்களையும் அரை நாளிலேயே காலி செய்து, 7 விக்கெட்களை அள்ளி தன்னுடைய தேர்வை நியாயப்படுத்தியது மட்டுமல்ல, விமர்சனங்கள் செய்த அனைவரையும் வியந்து பாராட்ட வைத்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். 

போட்டியின் முதல் நாளிலேயே ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தை 259 ரன்களுக்குள் சுருட்டினார் வாஷிங்டன் சுந்தர். இன்றைய ஆட்டத்தையே மாற்றிய விக்கெட் ரச்சின் ரவீந்திராவினுடையது. 65 ரன்களில் மிகவும் வலிமையாக விளையாடிக்கொண்டிருந்த ரச்சினுக்கு, வாஷிங்டன் சுந்தர் வீசிய ஆஃப் ஸ்பின் அவரை ஏமாற்றி கடந்து சென்று ஆஃப் ஸ்டம்ப்பைத் தாக்கியது. சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த சுழற்பந்து அது. வாஷிங்டனின் 7 விக்கெட்களில் ஐந்தும் 'போல்ட்'. 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி தனது வாழ்நாளின் பெஸ்ட் பெளலிங் பர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மீண்டும் அணிக்குள் அளிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு நியாயம் சேர்த்திருக்கும் வாஷிங்டன் இரண்டாவது பேட்டிங்கிலும் அற்புதங்கள் செய்வார் என எதிர்பார்க்கலாம். 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com