Vijay TV's Baakiyalakshmi Today's Episode Highlights - Gopi Confronts Baakya Over Her Marriage with Palaniswamy
பாக்கியலட்சுமி

கல்யாணம் பற்றி நேரடியாக கேட்ட பழனிசாமியின் குடும்பம்… பாக்யா எடுத்த முடிவு - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோட் ஹைலைட்ஸ்!

விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்று இரவு(17-04-2024) ஒளிபரப்பாக இருக்கும் பாக்யலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன?
Published on

பாக்யாவை பார்க்க ரெஸ்டாரன்ட் வரும் கோபி ‘’நீயும் அந்த பழனிசாமியும் சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்கீங்களா? உனக்கும் அவனுக்கும் கல்யாணமாமே? உன்னை பொண்ணு கேட்கப்போறதா அந்த பழனிசாமியோட அக்கா என்கிட்டயே நேரா வந்து என் முகத்துக்கு நேரா கேக்குறாங்க. இதெல்லாம் எவ்வளவு கேவலமா இருக்கு தெரியுமா? பொண்ணு பாக்குற வயசுலயா நீ இருக்குற? காலேஜ் முடிச்சுட்டு என்னை யாராவது கல்யாணம் பண்ணிக்கோங்கனு காத்துகிட்டு இருக்கியா? கேவலமா இல்ல’’ என்று கோபப்படுகிறான். பாக்கியா ‘’போதும் நிறுத்துங்க… கேவலத்தைப்பத்தி நீங்க பேசாதீங்க'’ என்று பதிலடி கொடுக்கிறாள் பாக்யா. 

‘’நீ என்ன வேணா பண்ணு…. ஆனா அந்த பழனிசாமியை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ நல்ல அம்மானு போட்டுக்கிட்டு இருக்க வேஷம் கலைஞ்சிபோயிடும். அப்புறம் என் குடும்பம் யாரும் உன் கூட இருக்க மாட்டாங்க… எல்லாரும் என் கூட வந்துடுவாங்க’’ என்று மிரட்டுகிறான் கோபி. ‘’நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்காது’’ என்று பாக்யா சொல்ல ‘’என்னது அப்ப உனக்கும் அந்த பழனிசாமிக்கும் கல்யாணம் நடக்காதா?’’ என்று கோபி கேட்க ‘’இல்ல என் குடும்பம் என்ன விட்டு வராது… என்னை கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க’’ என்று சொல்கிறாள் பாக்யா. 

Vijay TV's Baakiyalakshmi Today's Episode Highlights - Gopi Confronts Baakya Over Her Marriage with Palaniswamy
பாக்கியலட்சுமி


‘’நீ எவனை வேணா லவ் பண்ணிட்டு போ… ஆன் என் பொண்ணை எதுக்கு அந்த பழனிசாமியோட மருமகன் விமலோட பேச விடுற? இதெல்லாம் உன்னோட பிளான் தான?’’ என்று கேட்க ‘’இனியா எனக்கும் பொண்ணுதான்’’ என்று பாக்கியா பதில் கொடுக்கிறாள். ‘’என் பொண்ணு விஷயத்துல ஏதாவது செய்யணும்னு நினைச்ச அவ்வளவுதான் தொலைச்சிடுவேன்’’ என்று கோபி பாக்யாவை எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான். 

அடுத்ததாக இதே சிந்தனையில் இருக்கும் பாக்யா வீடு வரைக்கும் போய்விட்டு வருவதாக சொல்லி பழனிச்சாமி வீட்டுக்கு வர பழனிசாமியின் அக்கா சுந்தரி, பாக்யாவிடம் நேரடியாக கல்யாணம் விஷயம் பற்றி பேசுகிறார். இதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ‘’எனக்குள்ள அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்ல.. இத பத்தி நீங்க பழனிசாமி சார் கிட்ட பேசி இருந்தா என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இருந்து இருக்காது. ஒரு ஆணும் பொண்ணும் பேசினா அது காதல்ல தான் போய் முடியும்னு எப்படி சொல்றீங்க.. அவர் மட்டுமில்ல யாரையும் என்னுடைய அடுத்த துணையா நினைச்சு கூட பார்க்க முடியாது. 

Vijay TV's Baakiyalakshmi Today's Episode Highlights - Gopi Confronts Baakya Over Her Marriage with Palaniswamy
பாக்கியலட்சுமி

கோபி குடும்பத்தை விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி என்னால இருக்க முடியாது. நான் என் அத்தை மாமா பசங்களோட தான் இருப்பேன்’’ என்று சொல்ல ‘’என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டு பிறகு அப்படி இருக்கலாமே’’ என்று சுந்தரி கேட்க வேண்டாம் எனச் சொல்கிறார் பாக்யா. ‘’என்னை தப்பா நினைச்சுக்காதீங்க’’ என்று பாக்யா சொல்ல, சுந்தரி ரூமுக்குள் சென்றுவிட பாக்கியாவிடம் பழனிச்சாமியின் அம்மா ‘’அவ மனசுல இருக்குறதை கேட்டுட்டா.. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதம்மா’’ என்று சொல்ல பாக்யா ‘’எனக்குள்ள அப்படி எந்த எண்ணமும் இல்லம்மா… நான் ஏதாவது தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க’’ என்று சொல்கிறாள். இந்த பேச்சை இதோட விட்டுவிடலாம் என்று சொல்கிறார். ‘’உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இல்லன்னு தெரிஞ்ச பிறகு நாங்க அதை பத்தி பேச மாட்டோம்’’ என்று சொல்கிறார் பழனிசாமியின் அம்மா. 

Vijay TV's Baakiyalakshmi Today's Episode Highlights - Gopi Confronts Baakya Over Her Marriage with Palaniswamy
பாக்கியலட்சுமி

பிறகு ரெஸ்டாரன்ட் வந்த பாக்யா இதைப் பற்றி பழனிசாமியிடம் பேசிவிடலாம் என்று முடிவெடுத்து வெளியே சென்று எப்படி பேசுவது என்று யோசிக்க பழனிசாமி ‘’என்ன மேடம் இங்க நிக்கிறீங்க’’ என்று கேட்கிறார். ‘’சூப்பர் மார்க்கெட் போகணும்… பில்ல கொஞ்சம் குளறுபடி இருக்கு’’ என்று சொல்ல பழனிசாமி ‘’நானும் அங்க தான் போறேன். வாங்க’’ என்று சொல்லி கூப்பிட ‘’பாக்யா இதுதான் சரியான சந்தர்ப்பம்’’ என்று கிளம்பி செல்கிறார். ‘’சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’’ என பாக்யா சொன்னதும் பழனி ஷாக் ஆகிறான். 

பழனிசாமியின் ஷாக்கும், பாக்யாவின் கேள்வியுமாக முடிந்திருக்கிறது இன்றைய எபிசோட்.

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com