‘’அடங்குங்கடா 200 ரூபா உபி-ஸ்… இனி விஜய்தான்’’ - திமுகவினருடன் மோதும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்!
அடிக்கடி எக்ஸ் தளத்தில் எதாவது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்தவரும், பிக்பாஸ் அல்ட்டிமேட் வெற்றியாளருமான பாலாஜி முருகதாஸ். இதில் நேற்று நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தை எழுதினார்.
‘’நான் திமுகவை வெறுக்கிறேன்! வாரிசு அரசியலை வெறுக்கிறேன். நான் tvk கட்சியில் சேரப் போகிறேன்… டேய் உபிஸ் நான் விஜய் சாருடன் இணைகிறேன்’’ என்று பதிவிட்டார். இது திமுக ஐடி விங் அணியினரை காயப்படுத்த உடனடியாக ‘’பாலாஜி முருகதாஸ் குடித்துவிட்டு எழுதிக்கொண்டிருக்கிறான், வெறும் விளம்பரத்துக்காக எழுதுகிறான்'’ என கமென்ட்டுகள் பறந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொடர் கமென்ட்டுகளால் திமுகவினருக்கு பதிலடி கொடுத்துவருகிறார் பாலாஜி முருகதாஸ்.
‘’தற்குரிஸ் என் வாழ்க்கை அல்லது வேலை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை. நான் ஒரு சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வருகிறேன். 21 வயதில் மிஸ்டர் இந்தியா இன்டர்நேஷனல் ஆனேன். 25 வயதுக்குள் பிஎம்டபிள்யூ கார் வாங்கிவிட்டேன். நான் பப்ளிசிட்டி தேடுகிறேன் என்று நீங்கள் நினைத்தால், பிக்பாஸ் வென்ற பிறகும் நான் ஒரு பேட்டி கூடத்தரவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 200 ரூபாய்க்கு வேலை செய்யாமல் இருப்பது எப்படி என்பதை என்னிடம் இருந்து கற்றுகொள்ளுங்கள்'’ என எழுதியிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.
அதோடு உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்து ‘’என் தாத்தாவும் உங்கள் தாத்தாவும் 1951-ல்தான் சென்னைக்கு வந்தார்கள். ஆனால், உங்களுக்கு மட்டும் இவ்வளவு கோடி சொத்துகள் எப்படி வந்தது. ஊழல் இல்லாமல் இது நடந்ததாக என்னை நம்பச்சொல்கிறீர்களா’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எதோ ஒரு போதையில் நிதானம் இழந்து எதை எதையோ எழுதிவருவதாக பாலாஜி முருகதாஸை விமர்சித்துவருகிறர்கள் திமுகவினர். பாலாஜியின் துணிச்சலான கருத்துகள் இன்னொருபக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றுவருகின்றன.