பிக் பாஸ் தமிழ் 8 : முதல் வாரமே வெளியேற்றப்பட்ட ரவீந்தர்... 7 நாட்களில் வாங்கிய சம்பளம் என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ் தமிழ் 8' சீசனில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் முதல் வாரம் மிகுந்த பரபரப்பாக இருந்தது. இந்த வாரம் நாமினேஷனில் ரவீந்தர், ஜாக்குலின், ரஞ்சித், அருண், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி ஆகியோர் இடம்பெற்றனர். உடல்நிலை சிக்கல்கள் மற்றும் குறைந்த மக்கள் ஆதரவால் சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.
அதோடு, ரவீந்தர் பிக் பாஸ் வீட்டில் இருந்த 7 நாட்களில் பெற்ற சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரவீந்தருக்கு ஒரு நாளுக்கு ₹50,000 சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், 7 நாட்களுக்கு அவர் மொத்தமாக ₹3.5 லட்சம் சம்பளம் பெற்றுவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரம் பல எதிர்பாராத திருப்பங்களை கொண்டிருந்தாலும், ரவீந்தரின் வெளியேற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.