ஐஸ்வர்யா - ரஞ்சித்
ஐஸ்வர்யா - ரஞ்சித்

பிக் பாஸ் தமிழ் 8 : மனநல சோதனையில் போட்டியாளர்கள்… சவுண்ட் சரோஜா Vs கவுண்டம்பாளையம் முருகன்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 6 மணிக்குத் தொடங்குகிறது. மொத்தம் இதுவரை 21 போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கான மனநல சோதனை சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் தொடங்கியிருக்கிறது.
Published on

பிக் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பாக அவர்களின் மன நலம் குறித்த சோதனை நடைபெறும். அதாவது பிக் பாஸ் குழுவினர் ஒவ்வொரு போட்டியாளரிடமும் மனநலம் சார்ந்த பல்வேறு கேள்விகளை கேட்பார்கள்.

எது உங்களை அதிகம் எரிச்சல் படுத்தும், என்ன செய்தால் நீங்கள் உடனே கோபப்படுவீர்கள், உங்களை சந்தோஷப்படுத்தும் விஷயம் என்ன, உங்கள் வாழ்வில் நடந்த துயரம் என்ன, உங்களின் நண்பர்கள் யார், என்ன அரசியல் சித்தாந்தம் உங்களைக் கவர்ந்தது என இப்படிப் பல கேள்விகள் கேட்கப்படும். இந்த கேள்விக்கான பதில்களை குறித்து வைத்துக்கொள்ளும் பிக் பாஸ் டீம் அதற்கேற்றபடி டாஸ்க்குகளையும், போட்டிகளையும் திட்டமிடும். அதன்படி இந்த சோதனை இன்று தொடங்கியிருக்கிறது. 

நடிகர் ரஞ்சித்
நடிகர் ரஞ்சித்

சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நாளை பிக் பாஸ் தொடக்க நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. நாளை காலையே கலை நிகழ்ச்சிகள் ஷூட் செய்யப்பட இருக்கும் நிலையில் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட பகுதிகளை நாளை மாலை ஷூட் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

இதற்கிடையே பிக் பாஸ் தமிழ் 8 சீசனின் முக்கிய போட்டியாளர்களாக நடிகர் ரஞ்சித்தும், நடிகை ஐஸ்வர்யாவும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். கவுண்டம்பாளையம் படத்தில் பிற்போக்கான பல கருத்துகளை சொல்லி கவனம் ஈர்த்த நடிகர் ரஞ்சித் பேசிக்கொண்டே இருப்பதில் வல்லவர். அதனால் அவர் வீட்டுக்குள் நுழைவதால் கன்டென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது என பிக்பாஸ் டீம் நம்புகிறது. அதேப்போல் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யாவும் செம சவுண்டு பார்ட்டி என்பதால் இந்த பிக் பாஸ் களைகட்டும் எனத் தெரிகிறது.

என்ன மக்களே ரெடியா?!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com