Bigg Boss 8 : 'கன்டென்ட் குடோன்’ ரவீந்தர், 'வன்ம குடோன்' ரஞ்சித் மீது பாய்ந்தது ஏன்?| Day 3
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இங்கே வீடு இரண்டு பட்டதால் பிக்பாஸூக்கு கொண்டாட்டம். இன்றைய ஆட்டம் யாருக்கு சாதகம், ஆண்களுக்கா,பெண்களுக்கா..?
ஆண்கள் அணியின் குட் புக்கில் இடம்பெற்று வந்தாலும், பெண்கள் அணிக்கு டிப் கொடுத்தும் வருகிறார் பவித்ரா. ''முத்துக்குமரனை நோட் பண்ணிட்டே இருங்க'' என்று ஆனந்தியிடம் தனியாக வந்து சொல்கிறார் பவித்ரா. அதே நேரத்தில் ஆண்கள் அணியுடன் சேர்ந்து சதி வேலைக்கும் திட்டம் போடவும் செய்கிறார் இந்த டபுள் ஏஜென்ட் பவித்ரா.
வட போச்சே!
பிக்பாஸ் சீசன் 8-க்கான தீம் பாடலுடன் மூன்றாம் நாள் காலை தொடங்கியது. நேற்று உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு வில்லங்கம் செய்ததால் ஆட்டம் சுவையற்று இருந்த நிலையில், இன்றைய ஆட்டத்தை தண்ணீரை வைத்து செய்ய முயன்றார் முத்துக்குமரன்.
தண்ணீர் குடிக்க கப்புடன் ஆண்கள் வீட்டுக்குள் சும்மா சும்மா சென்று வருகிறார் முத்துக்குமரன். இது இரண்டு அணியினருக்குமே கடுப்பாகிறது. வாட்டர் கேன்ல தண்ணீர் இருக்குல்ல, சும்மா சும்மா வந்துட்டுப் போவியா என்று இந்தப்பக்கம் ஜெஃப்ரி சண்டைக்குவர அதற்கு பதிலடி கொடுக்கத்தெரியாமல் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்தார் முத்து.
இந்தப்பக்கம், ''இப்படியெல்லாம் செய்யாதீங்க.. உங்களால பெண்கள் டீமுக்கும் சேர்ந்து வம்பு வந்துடும்'' என ஜாக்குலின் வந்து தனக்கு சாதகமாக இதை மாற்ற நினைத்தார். ஆனால், ஜாக்குலின் ஜெஃப்ரி திட்டம் பெருசாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ஒட்டுமொத்தத்தில் தண்ணீர் அரசியல் வற்றிப்போனது.
மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும். இவங்களுக்கு வேலை கொடுத்து பிஸியாக்கிடலாம்னு நினைத்த பிக்பாஸ் ‘வீட்டுப்பணி டாஸ்க்’ உடன் வந்தார். இந்த டாஸ்க்கில் ஜெயித்தால் ஒரு வாரம் எந்த வேலையும் செய்ய வேண்டாம். தோற்றவர்கள் அணியே இரண்டு வீட்டின் அனைத்து வேலையையும் செய்ய வேண்டும். ஜெயிச்சா கொண்டாட்டம் தோத்தா திண்டாட்டம்.
வெற்றிக்கனியா வீட்டுப்பணியா ?
மொத்தம் ஐந்து டாஸ்க் விளையாட வேண்டும். அதிக டாஸ்க் ஜெயிக்கும் அணி வின்னர் வின்னர் சிக்கன் டின்னர். முதல் டாஸ்க்கில் மூன்று புள்ளி கோலம் போட வேண்டும். அதற்கு பவித்ராவும் தர்ஷாவும் வருகிறார்கள்.
வேண்டுமென்றே பவித்ரா விட்டுக் கொடுத்து தர்ஷா ஜெயித்தது போலவே இருந்தது. அடுத்த டாஸ்க்கில் கூல்டிரிங் சேலேஞ்ச். யார் முதலில் கூல்டிரிங் குடித்து முடிக்கிறாரோ அவர் வின்னர். செளந்தரியா பாட்டிலை திறப்பதற்குள் குடித்து முடித்துவிட்டார் அர்னாவ். பாட்டம் சிப் பழக்கம் போல...
அடுத்து பொம்மைக்கு டயப்பர் மாட்டும் சேலஞ்ச். சுனிதாவை வீழ்த்தினார் அனுபவசாளி சத்யா. சப்பாத்தி டாஸ்க்கில் ஜெஃப்ரியும் ஜாக்குலினும் விளையாடினர். சப்பாத்தியை ரவுண்டா போடுறது தான் போட்டியே. இரண்டு பேருமே ரவுண்டாக போடவில்லை.
ஓரளவுக்கு ஜாக்குலின் ரவுண்டாக போட்டதால் ஜாக்குலினுக்கு பாயின்ட் போனது. இப்போது, இரண்டு அணியுமே தலா 2 பாயிண்டுகளுடன் இருந்ததால் கடைசி டாஸ்கில் யார் ஜெயிக்கிறாரோ அந்த அணி தான் வின்னர்.
சிக்கலாக இருந்த சீரியல் லைட் ஒயரை சிக்கெடுத்து லைட் எறிய வைக்க வேண்டும். இந்த டாஸ்க்கில் அருணும் முத்துவும் விளையாடினார்கள். முத்துக்குமரனுக்கு ஒயர் அந்துவிட்டது. அருண் அசால்ட்டாக எடுத்து அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றார். ஆண்கள் அணிக்கு வெற்றிக்கனி. பெண்கள் அணிக்கு வீட்டுப்பணி என முடிவானது. வெல்டன் பாய்ஸ்!
''ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதுறணும்'' என்பதில் தெளிவாக இருக்கும் பவித்ரா, விஷாலுடன் சண்டைக்குச் சென்றார்.
சபாஷ் சரியான போட்டி :
‘போட்டா போட்டி’ என்ற அடுத்தப் போட்டியை தொடங்கினார் பிக்பாஸ். இது ஒரு விவாதப் போட்டி. கொடுக்கப்படும் தலைப்புக்கு விவாதிக்க வேண்டும். வீக்லி டாஸ்க் என்பதால் மூன்று நாட்களுக்கு நடத்த திட்டம். இந்தப் போட்டியின் முதல் தலைப்பு ‘நம்பிக்கைக்குரியவர் யார்?'
'ஆண்களா பெண்களா’ என்பது தான். இதில் விளையாட ஆண்கள் அணியிலிருந்து விஷாலும் ரவீந்திரனும் வர, பெண்கள் அணியிலிருந்து முத்துவும் ஆனந்தியும் வந்தார்கள். பொதுவாகவே, ஆனந்தியும் முத்துவும் விவாத மேடையில் கலக்குபவர்கள் என்பதால் வெற்றி வாய்ப்பை தன் வசம் ஈர்த்தார்கள். பெண்கள் அணியே வெற்றியும் பெற்றது.
பல்ப் வாங்கிய பெண்கள் டீம்!
''ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அழுதுறணும்'' என்பதில் தெளிவாக இருக்கும் பவித்ரா, விஷாலுடன் சண்டைக்குச் சென்றார். ‘நீ வேணா சண்டைக்கு வா..’ என்பது போல இருந்தது. பின், அந்த சண்டை கொஞ்சம் கொஞ்சமா ரவீந்திரனுக்கும் ரஞ்சித்துக்குமாக மாறியது. இரண்டு பேருமே மாறி மாறி அடித்துக் கொள்ள களத்தில் இறங்கியதும் இரண்டு வீடுமே பதறிப்போனது.
இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டா என்ன பண்றதுன்னு பயந்துபோகும் பெண்கள் அணிக்கு இடம் கலவரமாவதால் பயமும் அதிகமானது.
குறிப்பாக, ஜாக்குலின் இரண்டு பேரையும் சண்டைப் போடாமல் விலக்க நினைத்தார். ஒரு கட்டத்தில் சமாதானமாகி, இருவரும் மன்னிப்பு கேட்க வந்து நின்றார்கள். திடீரென பாட்டுப் பாடிக்கொண்டே பிராங்க் செய்தோம் என்றார்கள். மொத்த பெண்கள் டீமின் முகமும் வாடிப் போனது. இந்த திட்டம் முந்தைய நாள் இரவே ஆண்கள் போட்ட ஸ்கெட்ச். இதற்கு பெண்கள் டீம் பலியானது. முதல் பலிகடா ஜாக்குலின். செம கடுப்பாகி வீட்டுக்குள் சென்று அழத் தொடங்கிவிட்டார். So Sad.
இப்படியொரு ப்ரான்க் செய்ய ஏற்கெனவே திட்டம் போட்டிருந்ததை பெண்கள் அணிக்கு பவித்ரா சொல்லியிருக்க வேண்டும். பவித்ரா கட்சி மாறிவிட்டார் என குற்றம் சாட்டினார் தர்ஷா.
கேப்டன் தர்ஷிகாவும் இந்த விஷயத்தில் பவித்ரா மீது செம அப்செட். ஏன் பவித்ரா இப்படி செய்யுற என்று கேட்கப் போனதையும் தவறாக எடுத்துக் கொண்டு வம்புக்கு வந்தார் பவித்ரா. ஆனால், இன்றைய நாள் ஆண்களுக்கானதாகவே முடிந்தது.
ஆக, வீட்டுப்பணி டாஸ்க்கில் அசால்டாக வெற்றிப் பெற்றது, ப்ராங்க் செய்து பெண்கள் டீமையே பல்ப் வாங்க வைத்ததென ஆண்கள் டீம் இண்டரெஸ்டிங்கான கன்டென்ட் கொடுக்கிறார்கள். பெண்கள் டீம் அழுதும் சண்டைப் போட்டும் கன்டென்ட்டை உருவாக்குகிறார்கள். நாளை இந்த சூழல் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.